ராஜ்யசபா எம்பியான கொண்டாட்டமா.. இளையராஜா இருக்கும் இடத்தை சுற்றி வாணவேடிக்கை என்னம்மா வெடிக்குது!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது.

Recommended Video

Ilayaraja ராஜ்யசபா M.P-யாக நியமனம்... மகிழும் தமிழகம் *Kollywood | Filmibeat Tamil

பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தான் இருக்கும் இடத்தை சுற்றி வாணவேடிக்கை வெடிக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார் இளையராஜா.

அமெரிக்காவில் இளையராஜா

அமெரிக்காவில் இளையராஜா

அமெரிக்காவின் சீட்டல் எனும் பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அவர் இருக்கும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் இளையராஜா.

இசையுலகில் எண்ணற்ற சாதனை

இசையுலகில் எண்ணற்ற சாதனை

70களில் தொடங்கி 2022லும் ஏகப்பட்ட புதிய படங்களுக்கு இசையமைத்து இசையுலகில் மிகப்பெரிய சாதனையை செய்து வருகிறார் இளையராஜா. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணா, பழசி ராஜா, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த இசையை அமைத்த இளையராஜா தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும், அவருக்கு கணக்கில் அடங்காத ஏகப்பட்ட மாநில விருதுகளும், இசையுலகில் வழங்கப்படும் உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசால் பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்பி

ராஜ்யசபா எம்பி

80 வயதை நெருங்கிய இளையராஜாவுக்கு சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் மற்றும் திரையுலக பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் என அனைவருமே இசைஞானிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இளையராஜா வீடியோ

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு அமெரிக்காவில் இருந்தபடியே நன்றி தெரிவித்த இளையராஜா தற்போது தான் இருக்கும் இடத்தை சுற்றி வாணவேடிக்கை வெடிக்கும் அற்புதமான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். இளையராஜா பங்கேற்க போகும் அந்த நிகழ்ச்சியில் தான் இப்படி வாணவேடிக்கை வெடிக்கிறதா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

பட்டாசுகளை விட ஜொலிக்கிறது உங்கள் முகம்

பட்டாசுகளை விட ஜொலிக்கிறது உங்கள் முகம்

"ஐயா உங்கள் சந்தோசமே எங்கள் சந்தோஷம். நீங்கள் சந்தோஷப்படும் போது உங்கள் முகம் அவ்வளவு அழகாக ஜொலிக்கிறது அந்த பட்டாசுகளை விட" என ஏகப்பட்ட ரசிகர்கள் இளையராஜாவின் வீடியோவை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். சீக்கிரமே இளையராஜா சென்னை திரும்ப உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாக் உள்ளன. சமீபத்தில், தனது மகன் யுவன் சங்கர் ராஜா உடன் இணைந்து மாமனிதன் படத்திற்கு இசையமைத்திருந்தார் இளையராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X