twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    80 வயதை தொடும் இளையராஜா, திருக்கடையூரில் சதாபிஷேகம் விழா.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க!

    |

    திருக்கடையூர் : இசைஞானி என்று தன்னுடைய ரசிகர்களால் பாராட்டப்படும் இளையராஜா தற்போது 80 வயதை அடைந்துள்ளார்.

    தன்னுடைய சிறப்பான இசையால் அனைவரையும் மகிழ்வித்துவரும் இளையராஜா 1100க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.

    Recommended Video

    இசைஞானி Ilayaraja சதாபிஷேகம்! உற்சாகமாக பங்கேற்ற குடும்பத்தினர், அவர் மட்டும் Missing! #Celebrity

    இந்நிலையில் அவருக்கு திருக்கடையூரில் சதாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாடல் அழகி தற்கொலை.. கொல்கத்தாவில் தொடரும் மர்ம மரணம்!மாடல் அழகி தற்கொலை.. கொல்கத்தாவில் தொடரும் மர்ம மரணம்!

    இசைஞானி இளையராஜா

    இசைஞானி இளையராஜா

    இசைஞானி இளையராஜா தன்னுடைய சிறப்பான பாடல்கள் மற்றும் பின்னணி இசைமூலம் அனைவரையும் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ் மட்டுமில்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் இவர் இசையமைத்துள்ளார்.

    80வது பிறந்தநாள்

    80வது பிறந்தநாள்

    இவருடைய மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா, பவதாரணி உள்ளிட்டவர்களும் தங்களது இசைப்பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 2ம் தேதி இவரது பிறந்தநாள். இதையொட்டி கோவையில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருக்கடையூரில் சதாபிஷேகம்

    திருக்கடையூரில் சதாபிஷேகம்

    தற்போது தனது 80வது வயதை துவக்கியுள்ளார் இளையராஜா. இதையொட்டி அவருக்கு முன்னதாகவே வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது திருக்கடையூர் அபிராமி கோயிலில் இன்றைய தினம் இவருக்கு சதாபிஷேகம் நடைபெற்றது. இதில் கங்கை அமரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சொந்தங்கள் சூழ நடைபெற்றது

    சொந்தங்கள் சூழ நடைபெற்றது

    மேலும் அவரது சொந்த பந்தங்கள் சூழ இந்த விழா இனிதாக நடைபெற்றது. இந்த விழாவில் அவருக்கு மங்கல நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கார்த்திக் ராஜா, பிரேம்ஜி உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மங்கல வாத்தியங்கள் முழங்க இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    ரசிகர்கள் வாழ்த்து

    ரசிகர்கள் வாழ்த்து

    எந்தவிதமான இசையறிவும் இல்லாமல் சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து சென்னை வந்து, சிறப்பான பல படங்களை கொடுத்தவர் இளையராஜா. அவர் மேலும் நீண்ட காலங்கள் வாழ்ந்து 1500 படங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாவும் வேண்டுதலாகவும் உள்ளது.

    பூரண வாழ்க்கை

    பூரண வாழ்க்கை

    80 வயதானவர்கள் இந்த சதாபிஷேகத்தை செய்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. குழந்தைகள், பேரன்கள் என்று எடுத்து பூரணமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இந்த சதாபிஷேகத்தை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இளையராஜா பூரணமானவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    English summary
    Ilayaraja entering his 80 and Sathabisekam of Ilayaraja happens in Thirukadaiyur today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X