இன்று ரிலீஸ் ஆன வனிதா விஜயகுமாரின் Mrs & Mr படத்தின் மீது இளையராஜா வழக்கு.. வழக்கை எதிர்கொள்ள தயார் - வனிதா!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ள படம் Mrs & Mr . இந்த படத்தை எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், நடிக்கவும் செய்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளராக வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு சம்பாதித்த பணத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளார். படம் இன்று அதாவது, ஜூலை 11ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சிவராத்திரி பாடலை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்திவிட்டதாக இளையராஜா வழக்கு தொடுத்துள்ளார்.
அதாவது.வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள Mrs & Mr படத்தில் ராபர்ட் மாஸ்டர், ஆர்த்தி, ஷகிலா, கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை 40 வயது கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை வைத்து உருவாக்கியுள்ளார். படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், படத்தில் இசைஞானி இளையராஜாவின் சிவராத்திரி தூக்கம் ஏது பாடலை முறையான அனுமதி வாங்காமல் பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 14ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இளையராஜா வழக்கு: நேற்று அதாவது ஜூலை 10ஆம் தேதி Mrs & Mr படத்தின் பத்திரிகையாளர்கள் ஷோ திரையிடப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வனிதா விஜயகுமார் பதில் அளித்தார். அதில், படத்தில் இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்தி உள்ளீர்களே அனுமதி வாங்கிவிட்டீர்களா என்று கேள்வி கேட்டதற்கு, " படம் தொடங்கிய போது இளையாரஜாவைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வந்தோம். ஆனால் அப்போது இந்த பாடலைப் பயன்படுத்துவது தொடர்பாக நாங்கள் எதுவும் அவரிடம் பேசவில்லை.
எதிர்கொள்ள தயார்: மேலும், நாங்கள் பயன்படுத்தியுள்ள பாடலுக்கு சோனி மியூசிக் இடம் தான் உரிமம் உள்ளது. எனவே நாங்கள் அவர்களிடம் பணம் கட்டி பாடலுக்கான உரிமத்தை வாங்கி உள்ளோம். எனவே எங்களுக்கு பயம் இல்லை. அப்படி ஒருவேளை பாடலைப் பயன்படுத்தியதற்கு வழக்கு தொடுத்தால் அதையும் எதிர்கொள்ளத் தயாராக தான் இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். வனிதா விஜயகுமார் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கு வந்தால் எதிர் கொள்ளவும் தயார் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இளையராஜா வழக்கு தொடுத்துள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது.
விளம்பரம்: மேலும் வனிதா விஜயகுமார் வேண்டும் என்றேதான் இளையராஜாவிடம் அனுமதி வாங்கவில்லை என்றும், அப்படி அனுமதி வாங்காமல் விட்டுவிட்டால், இளையராஜா வழக்கு தொடுக்கும் போது படத்திற்கு விளம்பரமாக அமையும் என்பதால்தான் வனிதா வழக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலாம் எனவும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











