இசைக் குறிப்புகளை சேதப்படுத்திட்டாங்க.. பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்!
சென்னை: தனது இசைக் குறிப்புகளை சேதப்படுத்தி விட்டனர் என்று பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்துள்ளார்.
Recommended Video
எல்.வி. பிரசாத் பரிசாக இளையராஜாவுக்கு அளித்த ஸ்டூடியோவை காலி செய்ய அவரது வாரிசுகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக இளையராக முன்னதாக வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இளையராஜா இசை கோப்புகளை அழித்துள்ளதாக காவல் நிலையத்தில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.

42 ஆண்டுகள்
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், தனது ரெக்கார்டிங் தியேட்டரை நீண்ட காலமாக இசையமைப்பாளர் இளையராஜா நடத்தி வருகிறார். இளையராஜாவின் இசை திறமையில் மயங்கிய எல்.வி. பிரசாத் அவருக்கு அந்த இடத்தை பரிசாக அளித்திருந்தார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக எத்தனையோ படங்களுக்கு அந்த தியேட்டரில் தான் இளையராஜா இசையமைத்துள்ளார்.

வழக்கு
ஆனால், இளையராஜா அந்த இடத்தில் தொடர்ந்து தங்கி வருவதையும், பணியாற்றுவதையும் எல்.வி. பிரசாத்தின் வாரிசுகள் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டரை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சினிமா தியேட்டர் ஒன்றை கட்டவும் அவர்கள் முயற்சி செய்து வருவதாக, இளையராஜா அவர்கள் மீது வழக்கு ஒன்றையும் தொடுத்துள்ளார்.

இசைக் குறிப்புகள் சேதம்
இந்நிலையில், தற்போது பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது, சென்னை மாநகரக் காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது ஸ்டூடியோவில் இருந்த இசைக் குறிப்புகளை சாய் பிரசாத் சேதப்படுத்தியுள்ளார் என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

புது ஸ்டூடியோ
இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சமரசத்தை கொண்டு வராத நிலையில், எப்போது இருந்தாலும், இந்த இடம் தனக்கு பிரச்சனை தான் என அறிந்த இளையராஜா, கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். ப்ரிவ்யூ தியேட்டரை சொந்தமாக வாங்கி உள்ளதாகவும், அதனை ரெக்கார்டிங் தியேட்டராக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்களை வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











