விரைவில் How to name it இசை ஆல்பம் 2... இளையராஜாவே அறிவிச்சுருக்காரு
சென்னை : இளையராஜாவின் இசை ஆல்பங்களில் How to name it இசை ஆல்பமும் ஒன்று.
இந்த இசை ஆல்பம் பலரது கவனத்தை கவர்ந்து விருப்பத்திற்குரிய ஒன்றாக இன்றளவும் உள்ளது.
இந்நிலையில் தற்போது இதன் இரண்டாவது பாகத்தை விரைவில் வெளியிட உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜாவின் படங்கள் மற்றும் அவரது பாடல்கள், பின்னணி ஆகியவை காலத்தால் அழிக்க முடியாதவை. அவர் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவராக இன்றளவும் உள்ளார். இளம் தலைமுறையினரும் அவரது இசைக்கு அடிமையாக உள்ளனர்.தொடர்ந்து மூன்று தலைமுறைகளை கடந்து அவர் இசையமைத்து வருகிறார்.

1417வது படத்தில் இளையராஜா
தற்போது 1417வது படமான நினைவெல்லாம் நீயடா படத்திற்கு இசையமைத்து வருவதோடு படத்தின் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். அந்தப் பாடலை பாடியுள்ளார் அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா. இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக தெரிகிறது.

இசை ஆல்பங்களும் வெளியீடு
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார் இசைஞானி இளையராஜா. இவரது இசையில் வெளியான இசை ஆல்பம் How to name it. கடந்த 1986ம் ஆண்டு வெளியான இந்த ஆல்பம் இன்றுவரை பல இசை கலைஞர்கள், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று விளங்குகிறது.

இசை வடிவ பாடல்கள்
இந்த ஆல்பத்தில் இந்திய -மேற்கத்திய இசைகளை உள்ளடக்கி இசை கோர்வையாக கொடுத்திருந்தார் இசைஞானி. பல்வேறு இசைக் கருவிகளை கொண்டு இந்த ஆல்பத்தில் இசையமைக்கப்பட்டிருந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இசை வடிவங்களாகஅவ அமைந்திருந்தது.

விரைவில் இரண்டாவது பாகம்
இந்நிலையில் இதன் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக தற்போது சமூக வலைதளம் மூலம் இளையராஜா அறிவித்துள்ளார். திரைப்படங்களில் பாகம் 1, பாகம் 2 என்று வருவது போல மியூசிக்கில் ஏன் வரக்கூடாது என்று ஒரு யோசனை வந்ததாகவும், அதனால் How to name it பாகம் 2 விரைவில் வெளியாக உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இசையுலகின் புதிய முயற்சி
எப்படி பெயரிடுவேன் என்ற இந்த இசை ஆல்பம் இசையுலகின் புதிய முயற்சியாக காணப்பட்டது. 48 நிமிடங்களில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆல்பம் இன்றளவும் இளையராஜா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இசை ஆல்பத்தின் இரண்டாவது பாகம் குறித்து இளையராஜாவே அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











