முதன் முறையாக இணைந்து இசையமைத்த அப்பா மகன்.. யுவன் - இளையராஜா காம்போவில் கம்பைனான 'தட்டிப்புட்டா'!

சென்னை: முதன் முறையாக இசைஞானி இளையராஜாவும் அவரது மகனான யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் இசைப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

35 ஆண்டுகளுக்கும் மேலாக..

35 ஆண்டுகளுக்கும் மேலாக..

இதுவரை 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, பத்ம விருதுகள் உட்பட ஏராளமனா விருதுகளை குவித்துள்ளார். இன்னமும் படங்களுக்கு இசையமைப்பது, பாடல்களை பாடுவது என தனது இசையை போலவே இளமையாக பணியாற்றி வருகிறார் இளையராஜா.

படு பிஸியாக இளையராஜா

படு பிஸியாக இளையராஜா

அந்த வகையில் தற்போது இயக்குநர் வெற்றிமாறன், சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா. இதேபோல் பல படங்களையும் ஆல்பங்களையும் கைவசம் வைத்துக்கொண்டு படு பிஸியாக உள்ளார் இளையராஜா.

90ஸ், 2கே கிட்ஸ்

90ஸ், 2கே கிட்ஸ்

இதேபோல் அவரது மகனான யுவன் சங்கர்ராஜாவும் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள, எக்கச்சக்கமான விருதுகளையும் குவித்துள்ளார்.

மாமனிதன் படம்

மாமனிதன் படம்

இந்நிலையில் இளையராஜா முதல் முறையாக தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி வைத்துள்ள படம் மாமனிதன். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.

Recommended Video

SURYA SIR GOLD CHAIN GIFT பண்ணாரு | NISHESH & SWETHA CHAT | C/O KADHAL TEAM CHAT | FILMIBEAT TAMIL
நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு


இந்நிலையில் இப்படத்தில் யுவன் இசையில் இளையராஜா பாடியிருக்கும் 'தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவ' பாடலின் சிங்கிள் ட்ராக் அண்மையில் வெளியானது. இதயத்தை வரும் மெல்லிசை காதல் ராகமான இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

செம விருந்து

செம விருந்து

இதன் சிங்கிள் ட்ராக்கில் இப்பாடலின் மேக்கிங்கும் காட்டப்பட்டுள்ளது. இதயத்தை லேசாக்கும் இந்த பாடலை இளையராஜா, ஃபீல் பண்ணி பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு இசைப் பிரியர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களாக உள்ளனர். இப்படி ஒரு காம்போவை விருந்து வைத்த சீனு ராமசாமியையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X