»   »  எஃப் எம் ரேடியோ, டிவி சேனல் இணையத்தில் தொடங்கினார் இளையராஜா

எஃப் எம் ரேடியோ, டிவி சேனல் இணையத்தில் தொடங்கினார் இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ, வீடியோ சேனல் ஆகியவற்றை தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

1000 படத்துக்கு மேல் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இதுவரை அதிகாரபூர்வ ரேடியோ, வீட்யோ சேனல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ (http://www.raajafm.com/index.html), தொலைக்காட்சி(www.ilaiyaraaja.tv) மற்றும் தனது பாடல்களை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றை தொடங்கியிருக்கிறார் இளையராஜா.

Ilayaraja launch TV and FM radio

இத்துவக்கம் குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ரசிகர் பெருமக்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த பொங்கல் திருநாளில் இருந்து இணையதள தொலைக்காட்சி, ரேடியோ, ONLINE STORE ஆகியவை ஆரம்பமாகிறது. இணையதள ரேடியோவில் 24 மணி நேரமும் என் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இணையதள தொலைக்காட்சியிலும் அப்படித் தான்.

ONLINE STORE-ல் என்னுடைய ரசிகர்கள் என்னிடம் இருந்து நேரடியாக பாடல்களை வாங்கிக் கொள்ளலாம், நேரடியாக பெறுவதற்கு இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. பாடல்கள் பதிவிறக்கமாகவும், சி.டி.க்களாகவும் பெற்றுக் கொள்ளலாம். அந்த நோக்கத்திற்காகத் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இணையதள தொலைக்காட்சி மூலமாக நீங்கள் என்னுடன் இணைந்தே இருக்கலாம். நானும் அடிக்கடி உங்களுடன் எனது நினைவுகளையும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார் இளையராஜா.

English summary
Ilayaraja launch on line TV channel and FM radio.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil