இளையராஜா பெயர் புகைப்படத்தை பயன்படுத்த யாருக்கு எல்லாம் தடை? வழக்கறிஞர் கொடுத்த விளக்கம்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான "டியூட்" திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் இரண்டு ஹிட் பாடல்களை பயன்படுத்தினர். இந்த இரண்டு பாடல்களும் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, காப்பிரைட் உரிமைகள் மீறப்பட்டதாக படக்குழுவினர் மீது இளையராஜா தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில், பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் தீர்ப்புக்கு முன்னர், இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள். இது தொடர்பாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
இளையராஜாவின் இரண்டு பாடல்களான கருத்தமச்சான் மற்றும் நூறு வருஷம் போன்ற பாடல்களின் அசல் தன்மை மாற்றப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக, அக்டோபர் 2025-ல் வழக்குத் தொடரப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இன்று அதாவது நவம்பர் 28, அன்று விசாரணையில், நீதிபதி என். செந்தில்குமார், பாடல்களைப் படத்திலிருந்து உடனடியாக அகற்ற உத்தரவிட்டார், ஏனெனில் இது இளையராஜாவின் காப்பு உரிமைகளைப் பாதிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன், அதே தயாரிப்பு நிறுவனத்தின் "குட் பேட் அக்லி" படத்திலும் இதே போன்ற குற்றச்சாட்டுகளால் வழக்கு தொடரப்பட்டது, இந்த காப்பிரைட் சர்ச்சைகள் தமிழ் திரையுலகில் மீண்டும் எழுப்பியுள்ளது. "டியூட்" படக்குழு, நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி பாடல்களை மாற்றி, OTT தளங்களில் சரிசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மைத்ரி தரப்பு வாதம்: வழக்கு வாதத்தின் போது, படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வி. பாலசுப்ரமணியம், "இந்தப் பாடல்களின் உரிமைகளை சோனி மியூசிக் நிறுவனத்திடமிருந்து முறையாகப் பெற்றுள்ளோம். பாடல்கள் 1957-ன் பதிப்புரிமை சட்டத்தில் மாற்றங்கள் வருவதற்கு முன் உருவாக்கப்பட்டவை என்பதால், அக்காலத்தில் தயாரிப்பாளரே முதல் உரிமையாளராக இருந்தார்; அது சோனி மியூசிக்கு விற்கப்பட்டது" என வாதிட்டார்.

உத்தரவு: சோனி மியூசிக் தரப்பு வழக்கறிஞரும் தலையிட முயன்றார், ஆனால் நீதிபதி, "நீங்கள் வழக்கின் தரப்பினர் இல்லாததால் உங்கள் வாதங்களைக் கேட்க முடியாது" என நிராகரித்தார்.இறுதியாக, நீதிமன்றம் இளையராஜா தரப்புக்கு சாதகமாக, படத்தை திரையிடல், ஓடிடி உள்ளிட்ட எந்தத் தளத்திலும் பாடல்களுடன் தொடர்ந்து ஸ்ட்ரீம் செய்வதை தடை செய்து, உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. படக்குழு 7 நாட்கள் அவகாசம் கோரியது, ஆனால் நீதிபதி அதை நிராகரித்து, "பிரிமா பேசி வழக்கின் அடிப்படையில் இது சாத்தியமில்லை" எனத் தெரிவித்தார். அடுத்த விசாரணை ஜனவரி 7, நீட்டிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எல்லாம் தடை: இப்படி இருக்கும்போது, இந்த தீர்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சரவணன், " இந்த தீர்ப்பின் மூலம் இசைஞானிக்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவில் இசைஞானியின் பெயர் மற்றும் புகைப்படத்தை வணிக நோக்கத்தில் தான் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று விளக்கம் அளித்தார். அதைவிடுத்து பலரும் அந்த உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, பகடை செய்து வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











