எனக்கு தெரியாமலேயே என்னை நீக்கியிருக்கிறார்கள்... விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்!
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படக்குழு மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கியவர் மணிகண்டன். தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் கடைசி விவசாயி படத்தில் நடித்துள்ளனர்.
இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

கருத்து வேறுபாடு
இந்தப் படத்தை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்தார். இந்நிலையில் படக்குழுவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இளையராஜாவுடன் பணியை தொடர விரும்பாத படக்குழு, படத்தில் இருந்து இளையராஜாவை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை வைத்து இசை தொடர்பான பணிகளை முடித்து விட்டனர்.

இளையராஜா புகார்
படத்தில் இருந்து நீக்கியது குறித்த தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு கடைசி விவசாயி படத்தின் ட்ரெயிலரை சமீபத்தில் ரிலீஸ் செய்தது. டிரெய்லரில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பதை அறிந்த இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக இசைக் கலைஞர்கள் சங்கத்தில் கடைசி விவசாயி படக்குழு மீது இளையராஜா புகார் அளித்துள்ளார்.

சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
தனது அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து படத்துக்கு இசையமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இளையராஜா புகார் அளித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்து வரும் படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1000 படங்களுக்கு மேல்
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வரும் இளையராஜா, 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார், தற்போது விடுதலை, துப்பறிவாளன் 2, மாயோன், தமிழரசன், மதுரை மணிகுறவன், க்ளாப், மாமனிதன், கடவுள் 2, நினைவெல்லாம் நீயடா, முன்பதிவு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவாகியுள்ள பல்வேறு படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.


Click it and Unblock the Notifications











