சும்மா ஆடுமா சோழியன் குடுமி?.. இளையராஜா பயோபிக்கால் இசைஞானிக்கு இவ்ளோ லாபம் வரப்போகுதோ?
சென்னை: இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இளையராஜாவாக தனுஷ் நடித்தால் அவருடன் அந்த காலம் முதல் நட்பாக பழகிய பல இயக்குநர்கள் மற்றும் பாடகர்கள் என பலரையும் இந்த படத்தில் கொண்டு வந்து ஆக வேண்டுமே என்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியன், கங்கை அமரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெறுமா? என ரசிகர்கள் படத்தை பற்றிய ஹைப்பை இப்பவே அதிகரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிக்கவுள்ள நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் பயோபிக்கை சிம்புவை வைத்தும் வைரமுத்து பயோபிக்கை விஷாலை வைத்தும் இயக்கலாம் என போட்டோக்களையே எடிட் செய்து போட்டும் ஒரு பக்கம் கலாட்டா நடைபெற்று வருகிறது.

பண்ணைபுரத்தில் இருந்து சென்ட்ரலுக்கு எப்படி இளையராஜா வந்தார் ஆரம்பமே தப்பா இருக்கே அருண் மாதேஸ்வரா இதையெல்லாம் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ண மாட்டியப்பா என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் டீகோட் செய்து கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். யார் என்ன சொன்னால், என்ன இந்த பயோபிக்கை இளையராஜா எடுப்பதற்கு பின்னணியில் அவருக்கு வரப் போகும் லாபம் எவ்வளவு பெரிது என்பது தான் தற்போது நிஜமான ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.
ராயல்டியில் கறார்: இளையராஜாவின் பாடல்களையும் இசையையும் யாராவது அவரது அனுமதியின்றி பயன்படுத்தினால் ராயல்டி கேட்டு வழக்குப் போட்டு விடுவார் என்கிற அளவுக்கு இளையராஜா மீது சமீப காலமாக மிகப்பெரிய நெகட்டிவிட்டி உருவாகி இருக்கிறது. மேலும், இளையராஜாவை சங்கி என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். எஸ்.பி. பாலசுப்ரமணியமே தனது கச்சேரிகளில் இளையராஜா இசையை பயன்படுத்தக் கூடாது என பேசியது எல்லாம் பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், இளையராஜாவை தவிர வேறு யாரும் இந்த படத்துக்கு மியூசிக் போட முடியாது. போட்டால் அந்த மியூசிக் டைரக்டர் மீதே இளையராஜா கேஸ் போட்டு விடுவார் என்கின்றனர்.

இசை படம் வந்துடுச்சே: எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ் நடிப்பில் வெளியான இசை படம் வந்துடுச்சே மறுபடி ஏன் இளையராஜா பயோபிக்கை எடுக்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தையே குழப்பி எடுத்த நிலையில், இளையராஜா படத்தை சொதப்பாமல் இருக்க மாட்டார் என்றும் கிளைமேக்ஸில் இளையராஜா கையில் துப்பாக்கி கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் ட்ரோல் செய்கின்றனர்.
40 சதவீதம் லாபம்: இந்த படத்தை இளையராஜா நேரடியாக தனது பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கவில்லை. ஆனால், தனது பி.ஏ. ஸ்ரீராம் பக்திசரண் மூலமாக தயாரிக்கிறார் என்றும் வேறு இரு தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் தலா 30, 30 சதவீதம் லாபமும் இளையராஜாவுக்கு 40 சதவீதம் லாபமும் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பதின் மூலம் அதற்கான சம்பளமும் இளையராஜாவுக்கு ஒரு பெரிய தொகையாக போகும் என்றும் கூறுகின்றனர். தனுஷ் உடன் இணைந்து எந்த எந்த முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் எந்த எந்த முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இணைவார்கள் என்கிற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











