Don't Miss!
- News
தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரியை மாற்றணும்.. "என் இனிய தமிழ் மக்களே ஏன்?".. ரகசியம் உடைத்த பாரதிராஜா
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆங்கிலப்படத்துக்கு இசை அமைத்துள்ள இளையராஜா..கிராமி அவார்டுக்கு செல்கிறது
சென்னை:
இளையராஜா
ஆங்கிலப்படம்
ஒன்றிற்கு
இசை
அமைத்துள்ளார்.
இப்படம்
சிறந்த
பின்னணி
இசைக்காக
விருது
பெற்றுள்ளது.
இளையராஜா
இசையமைப்பில்
உருவான
ஆங்கிலப்படத்தின்
பாடல்
வெளியாகியுள்ளது.
Recommended Video
இளையராஜா இசையமைத்துள்ள 'எ பியூட்டிஃபுல் பிரேக் அப்' திரைப்படத்தின் 'கம் ஃப்ரீ மீ' பாடல் விரைவில் ரசிகர்கள் கேட்கும் வகையில் வெளியாகும்.
விஜய்சேதுபதியை
மனம்
திறந்து
பாராட்டிய
இளையராஜா…
என்ன
சொன்னார்
தெரியுமா
?

கிராமிய இசையின் நாயகன் இளையராஜா
இசைஞானி இளையராஜா 1970 களின் இறுதியில் இசையமைக்க ஆரம்பித்தார். 80 களில் உச்சத்தை தொட்டார். அவரது வித்தியாசமான கிராமிய மனம் கவரும் இசைக்கு அடிமையாகாதோர் யாரும் இல்லை எனலாம். இன்றளவும் அவரது வெறித்தனமான ரசிகர்கள் அவரது இசையைப்பற்றி பேசி வருகின்றனர். அவரது கிராமிய மனம் கவரும் இசை தமிழக பட்டித்தொட்டியெங்கும் இன்றும் ஒலித்து வருகிறது.

இளையராஜாவை பின்பற்றும் முன்னணி இசையமைப்பாளர்கள்
இன்றைய முன்னணி இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் உள்ளிட்டோர் இளையராஜாவிடம் தயாரானவர்களே. அவர்களில் யுவனின் இசையில் இளையராஜாவின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். மனதை நெகிழ வைக்கும் இசைக்கு யார் சொந்தக்காரர் என்றால் இளையராஜாவை பிடிக்காதவர்கள் கூட அவர்பக்கம் கைநீட்டுவார்கள். இளையராஜாவின் இசை காலத்துக்கு ஏற்ப மாறியது. நவீன வரவுகளை அவர் கைகொண்டார் என்றே சொல்லலாம்.

ஆங்கிலப்படத்துக்கு இசை
காலத்துக்கு ஏற்றாற்போல் மாறிய இளையராஜாவின் இசை இன்றும் ரசிக்கப்படுகிறது, மொழி கடந்து ஆதிக்கம் செலுத்தும் தமிழ் இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். 'எ பியூட்டிஃபுல் பிரேக்அப்' என்கிற ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் முக்கியமான பங்களிப்பு
அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல முக்கியமான திரைக்கலைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள். இப்படத்திற்கான இளையராஜாவின் பங்கு, படத்தின் மதிப்பை அதிகரித்துள்ளது.

புதிய வடிவில் இசை
உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட இளையராஜா இப்படத்திற்காக இசையமைத்துள்ளது, தமிழகம் தாண்டி பெருமளவில் ரசிகர்களிடம் இப்படத்தை கொண்டுச் சேர்க்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பின்னணி இசை, அதற்கென பெயர்போன இளையராஜாவால் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

கிராமி, குளோப் அவார்டுகளுக்கு பரிந்துரை
சமீபத்தில் இளையராஜா "எ பியூட்டிஃபுல் பிரேக் அப்' திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். இளையராஜா இப்படத்தில் அமைத்த இசை முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், இளையராஜாவின் குழுவினர், இந்தப் படத்தின் இசையை ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பெரிய அளவிலான பகுதிகளுக்கு போட்டிக்கு அனுப்பியுள்ளனர்.

சிறந்த பின்னணி இசைக்கான விருது
இளையராஜா இசையமைத்துள்ள ‘A Beautiful Breakup' ஏற்கெனவே 12-வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. இந்நிலையில் இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்' திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ' பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.