இசை பஞ்சாயத்து.. கருத்து மோதல்.. கடைசி விவசாயி படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா இளையராஜா?
கடைசி விவசாயி படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா இளையராஜா?
சென்னை: காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி விவசாயி படத்தில் இருந்து இளையராஜா வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் மணிகண்டன், விஜய்சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு நடிப்பில் கடைசி விவசாயி எனும் படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு புதிதாக இசை பஞ்சாயத்து எழுந்துள்ளது.
கடைசி விவசாயி
காக்க முட்டை படத்தை எடுத்து தேசிய விருது வென்ற மணிகண்டன், விஜய்சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்று இருந்தார். இந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து கடைசி விவசாயி படத்தை மணிகண்டன் இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் டிரைலர் ரிலீசாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ யார்
கடைசி விவசாயி படத்தில் விஜய்சேதுபதி தான் ஹீரோவாக நடிக்கிறார் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால், அதன் டிரைலரில் பார்க்கும் போது தான், நல்லாண்டி எனும் தாத்தா தான் கதையின் நாயகன் என்றும், விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இளையராஜா
கடைசி விவசாயி படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க போகிறார் என அறிவிக்கப்பட்டு, அந்த படத்திற்கான இசை பணிகளையும் இளையராஜா மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசரிலும் இசைஞானி இளையராஜாவின் பெயர் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தற்போது, இந்த படத்தில் இருந்து இளையராஜா வெளியேறி உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

என்ன பிரச்சனை
இயக்குநர் மணிகண்டன் மற்றும் இளையராஜா இடையே படத்தின் இசை குறித்து வெடித்த கருத்து மோதலே, இளையராஜா இந்த படத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணம் என தகவல்கள் கசிந்துள்ளன. இருவரும் சமரசமாக முடிவெடுத்து, இந்த படத்தில் இருந்து இளையராஜா வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜாவுக்கு பதில்
இசை பஞ்சாயத்து காரணமாக கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. இளையராஜா வெளியேறி உள்ள நிலையில், சந்தோஷ் நாராயணனை இந்த படத்திற்கு இசை அமைக்க இயக்குநர் மணிகண்டன் அணுகி உள்ளதாகவும், அவரும் சம்மதம் தெரிவித்து இசை பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. விரைவிலேயே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











