3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா?

சென்னை : இசைக்கு மறுபெயர் இளையராஜா என சொல்லும் அளவிற்கு அறிமுகம் தேவையில்லாத நபர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பிரபலமாக இருப்பவர் இளையராஜா. இளையராஜாவின் ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள், எத்தனை ஆயிரம் ஹிட் பாடல்கள் வந்தாலும், இளையராஜாவின் இசைக்கென தனி இடம் உண்டு. தமிழ் சினிமாவில் இசையில் புதுமைகள் பலவற்றிற்கு அடித்தளம் அமைத்தவர் இளையராஜா. அவரின் மேஜிக்கல் இசை ரசிகர்களை மட்டுமல்ல டைரக்டர்களையும் தற்போது வரை ஈர்த்து வைத்துள்ளது.

இசையின் ராஜா

இசையின் ராஜா

கிட்டதட்ட ஆயிரத்திற்கும் அதிகமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்திய மொழிகள் பலவற்றிலும் சுமார் 7000 க்கும் அதிகமான பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். இது தவிர பக்தி பாடல்கள், மியூசிக் ஆல்பம் என பலற்றிற்கும் இளையராஜா இசையமைத்துள்ளார். ஏராளமான பாடல்களை தனது சொந்த குரலில் பாடி உள்ளார்.

தயாரிப்பாளர் இளையராஜா

தயாரிப்பாளர் இளையராஜா

இளையராஜா இசை அமைப்பாளர், பின்னணி பாடி உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதோடு அவர் சில ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இளையராஜா, தனது சகோதரர் பெயரில் பாவலர் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இது இவர் தயாரித்த படங்களா

இது இவர் தயாரித்த படங்களா

ரஜினியின் ராஜாதி ராஜா, கமலின் சிங்காரவேலன் உள்ளிட்ட பல படங்களை தனது சகோதரர் ஆர்.டி.பாஸ்கருடன் இணைந்து இளையராஜா தயாரித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது தயாரிப்பு பேனரில் மீண்டும் படங்களை தயாரிக்க இளையராஜா திட்டமிட்டுள்ளாராம். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

அந்த டாப் ஹீரோக்கள் இவங்க தானா

அந்த டாப் ஹீரோக்கள் இவங்க தானா

லேட்டஸ்ட் தகவலின் படி, மூன்று டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க இளையராஜா நினைத்துள்ளாராம். அந்த மூன்று டாப் ஹீரோக்கள் வேறு யாருமில்லை. ரஜினி, கமல் மற்றும் விஜய் தானாம். இளையராஜாவுடன் பல ஆண்டு காலமாக பணியாற்றிய நட்பு இருப்பதால் ரஜினி, கமல் இதற்கு ஓகே சொல்ல அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் புதிய ஸ்டூடியாவிற்கு வந்து கமல் சந்தித்து விட்டு போனதற்கு இது தான் காரணமாம். ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொன்னார்கள்.

ஓ...இதுக்கு தான் அந்த சந்திப்பா

ஓ...இதுக்கு தான் அந்த சந்திப்பா

இதே போல் சமீபத்தில் இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா, விஜய்யை சந்தித்து பேசியதும் இந்த விஷயமாக தானாம். ஆனால் இந்த மூன்று ஸ்டார் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் திட்டம் பற்றி இளையராஜாவோ, யுவன்சங்கர் ராஜாவோ இதுவரை உறுதியாக எந்த வார்த்தையும் சொல்லவில்லை. இருந்தாலும் அனைத்தும் முடிவான பிறகு இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X