பர்த்டே ஸ்பெஷல்... 1000 ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட இளையராஜா!
பிறந்தநாளை முன்னிட்டு இசைஞானி இளையராஜா ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Recommended Video

காயங்களும் ஆறாதோ ! நீ இசை மீட்டினால்
சென்னை: பிறந்தநாள் வாழ்த்துக் கூற நேரில் வந்த ஆயிரத்திற்கு அதிகமான ரசிகர்களுடன் இசைஞானி இளையராஜா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா தமது 75வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு குடியரசு தலைவர், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், தன்னை வாழ்த்த வருபவர்களை, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் சந்திப்பது அவரது வழக்கம். அதுபோல் இன்றும் அவர் ரசிகர்களை சந்தித்தார்.

அதுமட்டுமின்றி, தமக்கு நேரில் வாழ்த்துக் கூறிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.
Comments
ilayaraja birthday fans photo isaignani tamil cinema இளையராஜா பிறந்தநாள் ரசிகர்கள் புகைப்படம் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications