twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பளம் வாங்காத இளையராஜா... நெஞ்சம் நெகிழும் சங்கிலி முருகன்

    |

    Recommended Video

    Ilayaraja | Special Olympics | பிறப்பால் அனைவரும் சமம் தான்- இளையராஜா அதிரடி பேச்சு- வீடியோ

    சென்னை: நான் எடுத்த முதல் இரண்டு படங்களுக்கும் இளையராஜா சம்பளம் வாங்க மறுத்துவிட்டு இலவசமாகவே இசையமைத்து கொடுத்தார் என்று நடிகர் சங்கலி முருகன் தெரிவித்தார்.

    ராஜா கைய வெச்ச அது ராங்க போனதில்லை. இந்த பாடலுக்கு ஏற்ப தான் தன்னுடைய வாழ்க்கை என்பதை, இளைய ராஜா பல முறை நிரூபித்து இருக்கிறார். தனது இசைப் பயணத்தில் கரடு முரடான பாதையில், கஷ்டங்கள் எத்தனை வந்த போதிலும் தன் திறமை மீது அதி பயங்கர நம்பிக்கை வைத்து பயணம் செய்தவர்.

    Ilayaraja refused to gets salary for the first two films-Sangili Murugan


    இளையராஜாவின் 75வது பிறந்த நாளில் பேசிய ரஜினி, அவர் எத்தனையோ படங்களுக்கு பணம் வாங்காமலேயே இசையமைத்திருக்கிறார் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லியிருந்த நிலையில், ஆரம்ப காலத்தில் தனது முதல் இரு படங்களுக்கு இளையராஜா பணம் வாங்காமலேயே இசையமைத்த ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றை தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான சங்கிலி முருகன் அண்மையில் நடிகர் சித்ரா லட்சுமணுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

    சங்கிலி முருகன் ஒரு மிக சிறந்த மனிதர் மட்டும் அல்ல. சினிமா துறையில் பலரும் அவர் மீது நன்மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். சங்கிலி முருகன் சொன்ன மிக முக்கியமான சில விசயங்கள்.

    Ilayaraja refused to gets salary for the first two films-Sangili Murugan

    மதுரையிலேருந்து நாடகம் போடணும், சினிமாவில் நடிக்கணும் என்று சென்னைக்கு வந்துவிட்டேன். பாலமுருகன் குழுவில் நடித்துக்கொண்டிருந்தேன்.
    ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பெல்லாம் வரவில்லை. அப்போது என் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், உனக்கு 40 வயசுக்குப் பிறகுதான் யோகம் இருக்கு. அப்பதான் நடிகரா வெளியே தெரிவே'ன்னு சொன்னார். அப்போ எனக்கு 19 வயது. அப்பல்லாம், நாடகம் போடுவதற்கென்றால், கொஞ்சமாவது பிரபலமான நடிகர் நடிக்க வேண்டும்.

    நான் ஓ.ஏ.கே.தேவரிடம் சென்று நடித்து உதவும்படி கேட்டேன். அவரும் சரியென்று சம்மதித்தார். திருச்சி பொருட்காட்சியில் இரண்டு நாடகங்கள் போடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அறைக்கு வந்து உட்காரக்கூட இல்லை. அப்போது இரண்டு பேர் வந்தார்கள்.

    அவர்களை பார்க்கும் பொழுது வித்தியாசமான தோற்றம் மட்டும் அல்ல. கலை தாகம் கொண்டு ஏதோ வாய்ப்பு கேட்க போகிறார்கள், என்று நினைத்தேன், அது இசை சார்ந்த வாய்ப்பு என்று பிறகு தான் தெரிந்தது. யாருப்பா என்று கேட்டேன். பாவலர் வரதராஜன் இருக்கார்ல, என்றார்கள். ஆமாம், வரதராஜன், நமக்கு நல்லாத் தெரியுமே, என்றேன்.

    அவரோட தம்பிங்க நாங்க. நான் பாஸ்கரன். இவன் ராஜா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். என்ன விஷயம், என்றேன். நாடகத்துக்கு மியூஸிக் போடணும்ங்கறதுதான் ஆசை என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இப்பதான் அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம். சரியான நேரத்துக்கு வந்திருக்காங்களேன்னு யோசிச்சேன். அட்வான்ஸ் வாங்கினதுக்கு முதல் நாளோ, மறுநாளோ வந்திருந்தாக் கூட தெரியாது. வாங்கின கையோட, இவங்களும் வந்திருக்காங்களேனு பிரமிப்பா இருந்துச்சு. கடவுள் இப்படித்தான் நல்லவங்களை நமக்கு அனுப்பி வைச்சிருக்கார் என்று நினைத்துக் கொண்டேன்.

    Ilayaraja refused to gets salary for the first two films-Sangili Murugan

    ஆர்மோனியமும் தபேலாவும் வைச்சிருந்தாங்க. நான் உடனே, கமலா என்பவரிடம் இந்தப் பசங்க எப்படி வாசிக்கிறாங்கன்னு கேட்டு சொல்லுங்கன்னு அனுப்பிவைச்சேன். அவங்களும் போய் வாசிச்சாங்க. அப்புறம் கமலா, நல்லா வாசிக்கிறாங்க. பிரமாதமா வருவாங்கன்னு தோணுது. தங்குறதுக்கு கூட இடமில்லையாம். நம்ம வீடு ஒண்ணு சும்மாதானே இருக்கு. அங்கே தங்கிக்கச் சொல்லிருக்கேன்' என்று கமலா தெரிவித்தார்.

    அப்புறம் வரிசையா நிறைய நாடகங்கள். ராஜாவோட இசை. விருதுநகர் பொருட்காட்சியில் நாடகம் போடும் போது, அண்ணே, புதுசா ஒண்ணு முயற்சி செஞ்சிருக்கோம். கேளுங்கண்ணே என்றார்கள். ஓ.ஏ.கே.தேவர், நான், இன்னும் எல்லாரும் உக்கார்ந்து கேட்டோம். கேட்டு முடிச்சதும் இதான்யா இப்போ லேட்டஸ்ட். பசங்க பின்றாங்கய்யா என்று ஓ.ஏ.கே.தேவர் சொன்னாரு.

    பின்னாடி இளையராஜா பத்ரகாளி மாதிரி படங்களுக்கு பாட்டு போட்டப்ப, தம்பி, நம்ம நாடகத்துக்கு அப்பவே இதைப் போட்டுருக்கீங்க, என்று சொல்லுவேன். ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி. அப்புறம் பல வருஷங்கள் கழிச்சு, சொந்தமா படம் எடுக்க முடிவு செய்து, தட்டு நிறைய கல்கண்டும் பணமுமா எடுத்துக்கிட்டுப் போனேன்.

    Ilayaraja refused to gets salary for the first two films-Sangili Murugan

    என்னண்ணே. படம் தயாரிக்கிறேன்னு இறங்கியிருக்கீங்க. எனக்கு பயமா இருக்குண்ணே என்றார் இளையராஜா. ஜெயிச்சிருவேன் தம்பி, நம்பிக்கை இருக்கு என்று சொன்னேன். சரிண்ணே, என்று சொன்ன இளையராஜா, தட்டில் இருந்த கல்கண்டை மட்டும் எடுத்துக்கொண்டார். பணத்தைத் தொடவே இல்லை. தம்பி, சம்பளத்தை எடுத்துக்கோங்க என்றேன்.

    சம்பளம்லாம் வேணாம்ணே. நீங்க நல்லா இருக்கணும். நல்லா வரணும். நான் பண்ணித்தரேன். ஆனா சம்பளம்லாம் வேணாம்ணே என்று திரும்ப திரும்ப சொல்விட்டு, பணம் வாங்க மறுத்துவிட்டார். நான் நெகிழ்ந்து போனேன். என்னுடைய முதல் இரண்டு படங்களுக்கும் இளையராஜா சம்பளமே வாங்காமல் தான் இசையமைத்துக் கொடுத்தார். இதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது, என்று கூறியிருக்கிறார் சங்கில் முருகன்.

    இப்போ தான் புரியுது, இளையராஜா எப்படி இசை ஞானி ஆனாருனு. நல்லதை செய்தல் நல்லதே நடக்கும். நடந்தே தீரும் என்பதுக்கு இளையராஜா ஒரு எடுத்துக்காட்டு. விடா முயற்சி மட்டுமே விஸ்வரூப வெற்றியை தரும் என்பதுக்கு இத்தகைய பதிவுகள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு பெரிதும் உதவும்.

    English summary
    Actor Sangili Murugan said that, Ilayaraja refused to get salary for my first two films and he made free music composed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X