twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவின் மைத்துனர்.. தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசையை பிரபலப்படுத்திய சசிதரன் காலமானார்!

    |

    சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் ட்ரூப்பில் ஏகப்பட்ட வெற்றி பாடல்களுக்கு இசையமைத்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் சசிதரன் காலமானார்.

    தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசையை பிரபலத்திய ஒட்டுமொத்த பெருமைக்கும் சொந்தக்காரர் இவர் தான் என்றே சொல்லலாம்.

    Ilayaraja’s cousin and poplar bass guitarist Sasidharan passed away

    தமிழ் சினிமா ரசிகர்களை இசைக்கடலில் நனைத்த ஏகப்பட்ட பாடல்களுக்கு இவரது பேஸ் கிட்டார் இசை பக்க பலமாக அமைந்தது.

    மேலும், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல பிரபல பின்னணி பாடகர்களின் கச்சேரிகளிலும் சசிதரனின் பேஸ் கிட்டாரின் மேஜிக் களைகட்டும்.

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவியின் உடன் பிறந்த சகோதரர் தான் சசிதரன் என்பது கூடுதல் தகவல்.

    இந்த இசை மேதையின் திடீர் மரணம் இளையராஜாவின் இசைக் கலைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இசை உலக ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சினிமா பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் பேஸ் கிட்டாரிஸ்ட் கலைஞர் சசிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, காதல் ஓவியம், ஆசை நூறு வகை என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த இவரது பிறந்தநாளும் இன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது இழப்பால் இளையராஜா மிகவும் மனம் உடைந்து போயுள்ளதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Maestro Ilayaraja cousin and poplar bass guitarist Sasidharan passed away today. So many music fans and celebrites mourns for his great loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X