இளையராஜா இசையில் சன் ஆஃப் இந்தியா...இணையத்தை தெறிக்க விடும் புதிய பாடல்

ஐதராபாத் : தெலுங்கில் மோகன் பாபு நடிக்கும் படம் சன் ஆஃப் இந்தியா. இந்த படத்தை டைமண்ட் ரத்ன பாபு இயக்குகிறார். இந்த படத்தை மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் மற்றும் 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி ஆகியன இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரக்ய ஜெய்ஸ்வால், ரகு பாபு, வெண்ணிலா கிஷோர், ரவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

சன் ஆஃப் இந்தியா முதல் பாடல்

இந்த படத்திற்காக இளையராஜா இசையில் ராகுல் நம்பியார் பாடிய "ஜெய ஜெய மகாவீரா" என்ற லிரிக்கல் வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. "ரகுவீர கதயம்" என துவங்கும் படத்தின் முதல் வீடியோ பாடலை பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளார்.

ராமருக்கு புகழாரம்

ராமருக்கு புகழாரம்

இந்த பாடலின் யூட்யூப் லிங்க்கை பகிர்ந்து, ட்விட்டரில் அமிதாப் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சினிமாவின் இரண்டு தலைசிறந்தவர்களான நடிகர் மோகன் பாபு மற்றும் மாஸ்ட்ரோ இளையராஜா ஒன்றாக இணைந்து ராமருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர். சன் ஆப் இந்தியா படத்திற்காக ரகுவீர கதயம் பாடல், ராமரை போற்றி அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப்பிற்கு நன்றி சொன்ன மோகன் பாபு

அமிதாப்பிற்கு நன்றி சொன்ன மோகன் பாபு

இந்த பாடலை வெளியிட்டதற்கு அமிதாப்பிற்கு நன்றி தெரிவித்து மோகன் பாபு பதிவிட்டுள்ள ட்வீட்டில், அமிதாப், நீங்கள் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் மிகவும் புகழ்பெற்ற நடிகர். நீங்கள் நடிக்காத வேடங்களே இல்லை. உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். சன் ஆஃப் இந்தியா பாடலை வெளியிட்டதற்கும், உங்களின் பாராட்டிற்கும் எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

டீசருக்கே வாழ்த்து சொன்ன சூர்யா

டீசருக்கே வாழ்த்து சொன்ன சூர்யா

முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்ட போது படக்குழுவிற்கும், தயாரிப்பாளர் விஷ்ணு மஞ்சுவிற்கும் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்திருந்தார். அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வரும் பல காட்சிகள் உண்மை சம்பவங்களை உணர்த்துவதாக உள்ளன. இந்த பாடலை யூட்யூப்பில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X