இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு.. அடுத்த இசை நிகழ்ச்சி எப்போ நடக்கப் போகுது தெரியுமா?

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவானான இளையராஜா கடந்த மார்ச் மாதம் ராக் வித் ராஜா எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சென்னைத் தீவுத் திடலில் நடத்தினார்.

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் கலந்து கொண்டு பாட்டுப் பாடி அசத்தினார். மேலும், துபாய் எக்ஸ்போவில் ஒரு நிகழ்ச்சி, மகன் யுவன் சங்கர் ராஜாவின் 25வது நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் இளையராஜா.

குறையாத இசை

குறையாத இசை

78 வயதிலும் குறையாத இசையாக நம்மிடையே நடமாடி வருகிறார் இளையராஜா. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவரை இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் இசை அரசன் என்றும் பல பட்டப் பெயர்களை வைத்து அழைத்து வருகின்றனர். சிறுவயதில் கையில் பிடித்த ஹார்மோனியப் பெட்டியை இன்னமும் விடாது புதிய புதிய இசையை கொடுத்து செவிக்கு விருந்து படைத்து வருகிறார்.

ராக் வித் ராஜா

ராக் வித் ராஜா

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், இசை நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, சர்வதேச திரைப்பட விழா என பல சினிமா திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி ராக் வித் ராஜா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

யுவன் 25

யுவன் 25

சமீபத்தில் மகன் யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை பிளாக்‌ஷீப் யூடியூப் சேனல் உடன் இணைந்து கொண்டாடினார்கள். இளையராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மகனை வாழ்த்தினார். மேலும், புதிய இசையமைப்பாளர்கள் போட்ட ட்யூனையே போடுறாங்களே.. கேட்க மாட்டீங்களா என ரசிகர்களையும் கொம்பு சீவி விட்டு பல இளம் இசையமைப்பாளர்களை மேடையில் கலாய்த்து விட்டார்.

இளையராஜா அறிவிப்பு

இளையராஜா அறிவிப்பு

இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை (மே 18) மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சியின் அறிவிப்பு வரப் போகிறது என ட்வீட் போட்டிருக்கிறார். மேலும், வரும் ஜூன் 5ம் தேதி நடைபெறப் போகும் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி குறித்த முக்கிய அறிவிப்பு தான் என நிகழ்ச்சி நடக்கப் போகும் தேதியையும் குறிப்பிட்டு இருக்கிறார் இளையராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X