இசை உலகிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே பேரிழப்பு.. லதா மங்கேஷ்கர் மறைவால் நொறுங்கிப்போன இளையராஜா!
சென்னை: பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதல் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ வெளியிட்டு லதா மங்கேஷ்கரின் நினைவுகளை பகிர்ந்த நிலையில், இசைஞானி இளையராஜா லதா மங்கேஷ்கர் மறைவால் மிகவும் மனம் வாடிய நிலையில், இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இளையராஜா இரங்கல்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவால் இசையமைப்பாளர் இளையராஜா பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். அவரது மறைவு இதயத்தையே நொறுக்கிவிட்டதாக ட்வீட் போட்டுள்ள இளையராஜா பிரத்யேகமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு லதா மங்கேஷ்கரின் மகத்துவங்களை அடுக்கி உள்ளார்.
இசை உலகிற்கு மட்டுமல்ல
சுமார் 50, 60 ஆண்டுகள் இந்திய சினிமா துறையை தனது தெய்வீக காந்தர்வ குரலால் கட்டிப் போட்டவர் லதா மங்கேஷ்கர். அவரது மறைவு என் மனதை மிகவும் வேதனையடைய செய்திருக்கிறது. அதனை எப்படி சரி செய்வேன் என எனக்குத் தெரியவில்லை. அவரது மறைவு இசை உலகிற்கு மட்டுமல்ல உலகிற்கே மிகப்பெரிய இழப்பு என தனது வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார் இளையராஜா. மேலும், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தாருக்கு தனது தனிப்பட்ட ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

அந்த பெருமை இருக்கு
இதயம் நொறுங்கிவிட்டது என ட்வீட் போட்டுள்ள இளையராஜா, தனது ட்வீட்டில் லதா மங்கேஷ்கருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது எனது பெருமை எனக் கூறியுள்ளார். இளையராஜா இசையில் 'ஆராரோ ஆராரோ' மற்றும் 'வளையோசை' உள்ளிட்ட சில பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசையுலகம் இரங்கல்
பிரதமர் மோடி, முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பல துறைகளை சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசை உலகை சேர்ந்த இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் என இசையமைப்பாளர்களும் பாடகர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











