யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா? இளையராஜா சொன்ன சூப்பர் சீக்ரெட்!
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Recommended Video
சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது தந்தை இளையராஜா யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து வாழ்த்துக் கூறியுள்ளார்.

இசை நாயகனின் பிறந்தநாள்
மேஸ்ட்ரோ, இசைஞானி என இசையுலகமே இளையராஜாவை கொண்டாடி வந்த நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இசை உலகின் நாயகனாக 25 ஆண்டுகளை சமீபத்தில் நிறைவு செய்ததை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவரது 43வது பிறந்தநாள் கொண்டாட்டம் அதை விட கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1979ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி இளையராஜாவுக்கும் ஜீவா அம்மாவுக்கும் மகனாக பிறந்தவர் யுவன்.

டிடி வாழ்த்து
இயக்குநர் செல்வராகவன், தொகுப்பாளினி டிடி நீலகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் தெரிவித்து அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இளையராஜா வாழ்த்து
இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்காக தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு ட்விட்டரில் வீடியோ போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் இளையராஜா. மேலும், யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது தான் எங்கே என்ன செய்து கொண்டிருந்தேன் என்கிற சுவாரஸ்ய தகவலையும் ஷேர் செய்துள்ளார்.

ஜானி ‘செனோரிட்டா'
ரஜினிகாந்தின் ஜானி படத்தின் ‘செனோரிட்டா' பாடலுக்கு ஆழியார் அணையில் ட்யூன் போட்டுக் கொண்டிருந்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் கேஆர்ஜி தான் டேய் உனக்கு மகன் பிறந்திருக்கான்னு சொன்னாரு.. மனைவி கர்ப்பமாக இருந்த போது கூட நான் கூட இல்லாமல் சினிமாவுக்காக இசையமைத்துக் கொண்டிருந்தேன். அப்படித் தான் யுவன் சங்கர் ராஜா பிறந்தார் என்கிற சூப்பர் சீக்ரெட்டான ஸ்டோரியை சொல்லி யுவனை வாழ்த்தி உள்ளார்.

ரசிகர்களுடன் உரையாடல்
விநாயகர் சதுர்த்தி அன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் யுவன் சங்கர் ராஜா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். நானே வருவேன் படத்தின் சிங்கிள் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். யுவன் சங்கர் ராஜாவை பல ரசிகர்களும் வாழ்த்தி அவரது பாடல்களை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











