twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐதராபாத் இசைக் கச்சேரியில் இளையராஜா - எஸ்.பி.பி இணைவார்களா?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தற்போது கமலின் 'சபாஷ்நாயுடு', 'மேற்கு தொடர்ச்சி மலை', 'நாச்சியார்', 'அம்மாயி', 'களத்தூர் கிராமம்' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா.

    தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து அவ்வப்போது வெளிநாடுகளிலும் கச்சேரிகள் நடத்தி வரும் இளையராஜா, நவம்பர் 5-ம் தேதி ஐதராபாத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

    தான் மட்டுமின்றி தனது இசையில் பாடல்கள் பாடிய மற்ற பாடகர், பாடகிகளையும் அந்த நிகழ்ச்சியில் பாட வைக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் இளையராஜா.

    தமிழ் லேது :

    தமிழ் லேது :

    இதற்கு முன்பு ஐதராபாத்தில் நடத்திய இசைக் கச்சேரிகளில் தமிழ், தெலுங்கு உள்பட தனது இசையில் உருவான பல மொழிப்பாடல்களையும் பாடிய இளையராஜா, இந்தக் கச்சேரியில் தெலுங்கு பாடல்களை மட்டுமே பாட பயன்படுத்த இருக்கிறாராம்.

    எஸ்.பி.பி பாடுவாரா? :

    எஸ்.பி.பி பாடுவாரா? :

    இளையராஜாவின் இசையில் தெலுங்கில் அதிகப்படியான ஹிட் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். அதனால், தெலுங்குப் பாடல்கள் மட்டுமே பாடப்படும் இசைக்கச்சேரியில் எஸ்.பி.பி இல்லாமல் எப்படி?

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் :

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் :

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது 50 ஆண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், வெளிநாடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கச்சேரிகள் நடத்தி வந்தபோது, தனது இசையில் உருவான பாடல்களை மேடைகளில் பாட ராயல்டி கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார் இளையராஜா.

     ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

    ராயல்டி விவகாரத்துக்குப் பிறகு இளையராஜா-எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் இதுவரை படங்களிலோ அல்லது கச்சேரிகளிலோ இணையவில்லை. ஆனால், இந்த ஐதராபாத் இசை நிகழ்ச்சியில் அவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள் ரசிகர்கள்.

    English summary
    Ilaiyaraja will be hosting a concert in Hyderabad on November 5th. The singers who have sung songs in Ilaiyaraja's music will perform in this concert.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X