சிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுத்த ராஜா.. அம்சமான மேட்டர் பாஸ்
Recommended Video
சென்னை சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ஹீரோ படத்தில் ஒரு ரகசியம் புதைந்துள்ளது. ஆமாங்க, இசைஞானி இளையராஜா இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
ஹீரோ படம் நாளை கிராண்ட் ஆக ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பா. விஜய் பாடல்கள் எழுதியுள்ளார். அதில் ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளாராம். அதை சர்ப்பிரைஸாக வைத்துள்ளனர்.

பா. விஜய் - இளையராஜா காம்போ வெற்றிக் கூட்டணியாகும். அந்த வகையில் இந்தப் பாடலும் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில் இதை ரகசியமாக வைத்துள்ளனராம்.
தர்பார் டிரெய்லர் வைரலாகியிருக்கிறது. ரஜினி போலீஸாக கம் பேக் ஆகியுள்ளார். மொத்தமாக மாறி வித்தியாசமாக இருக்கிறார். மூன்று முகம் ரஜினியைப் பார்ப்பது போல ரசிகர்கள் ஹேப்பியாக இதை கொண்டாடி வருகின்றனர்.
வெற்றி மாறன் அடுத்த படத்தில் விஜய்யை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால் அது உண்மை இல்லையாம். உண்மையில் சூரியை வைத்துத்தான் அவர் இயக்கப் போகிறாராம். சூரியிடம் ஒரு சூப்பர் கதையைக் கூறி அதில் நடிக்க வைக்கப் போகிறாராம். அடுத்த படம் சூர்யாவுக்கு என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் முடித்த பிறகுதான் அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வெற்றி மாறன் இயக்குவார் என்று சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் 169 படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். அதில் ஒரு சின்ன ரோலில் நடிக்கவும் உள்ளார். இப்படத்தின் இயக்குநர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கே.எஸ். ரவிக்குமார் பெயர் அடிபடுகிறது. பார்க்கலாம்.. அடுத்தடுத்து தகவல்கள் வரலாம்.


Click it and Unblock the Notifications











