பேத்திக்கு பியானோ வாசிக்க கற்றுத்தரும் இசைஞானி இளையராஜா.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: இசைஞானி இளையராஜா தனது மகளுக்கு பியானோ கற்றுத்தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video

அனைவராலும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த இசையமைப்பாளராக கோலொச்சி வருகிறார்.
இதுவரை 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைவ் கான்செர்ட்டுகளை நடத்தியுள்ளார்.

இளையராஜாவின் வீடியோ
ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார் இளையராஜா. உலகம் முழுக்கவும் ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் இளையராஜாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேத்திக்கு பியானோ
அதாவது இசையமைப்பாளரும் இளையராவின் மகனுமான யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தனது மகளுக்கு தனது அப்பாவான இளையராஜா பியானோ வாசிக்க கற்றுத் தருகிறார்.

எப்படி வாசிக்கணும்?
யுவன்சங்கர் ராஜாவின் மகள் பியானோ அருகில் அமர்ந்து அதனை தட்டிக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த இளையராஜா, ஒரு ட்யூனை போட்டு தனது பேத்திக்கு எப்படி பியானோவை வாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்.

ஏராளமான விருதுகள்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் க்யூட் வீடியோ என்றும், அதிர்ஷ்டசாலி பாப்பா என்றும் புகழ்ந்து வருகின்றனர். இளையராஜா நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய இசைக்கலைஞர்களில் ஒருவர் மற்றும் பல தேசிய விருதுகள், பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

ஹரிவராசனம் விருது
கடந்த ஆண்டு டிசம்பரில், மற்ற திரைப்படத் தொழில்களிலும் பணியாற்றிய இளையராஜா, கேரள மாநில அரசால் 2020 ஹரிவராசனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











