Don't Miss!
- News
இன்று கொட்டப்போகுது கனமழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கமல் 60: இப்போ மட்டும் உங்களுக்கு கேட்காதே.. கமலை கிண்டல் செய்த இளையராஜா!
Recommended Video
சென்னை: கமல் 60 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனை இளையராஜா கிண்டல் செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உச்ச நடிகராக உயர்ந்திருக்கிறார். 60 ஆண்டுகள் சினிமாவில் அவர் சாதனை புரிந்ததை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விழா நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் கமலுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவரது நண்பர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இசை நிகழ்ச்சி
இதேபோல் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

வரவேற்பு
உங்கள் நான் எனும் இந்த பிரமாண்ட விழாவில் கமலுடன் 80களில் ஜோடியாக நடித்த பல கதாநாயகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சகோதரிகளான அம்பிகாவையும் ராதாவையும் நடிகர் கமல்ஹாசன், மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று வரவேற்றார்.

கன்னத்தில் முத்தமிட்ட ராதா
அப்போது அம்பிகா, கமலுக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினார். ஆனால் நடிகை ராதா கமலை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டர்.

அவசர அழைப்பு
இதனை மேடையிலிருந்து கவனித்த இளையராஜா, கமல் சார் என அவசரமாக அழைத்தார். ஆனால் அது கமலுக்கு கேட்காததால் அவர், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

கிண்டலடித்த இளையராஜா
இதையடுத்து இப்போதெல்லாம் நாங்கள் கூப்பிட்டால் உங்களுக்கு காது கேட்காதே என்று கிண்டலாக கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
இதனை தொடர்ந்து மீண்டும் சத்தமாக அழைத்த இளையராஜா அதே மூடில் என்னுடன் வந்து பாடுப்பாடுங்கள் என்று கூறினார். இதையடுத்து மேடைக்கு சென்ற கமல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இருந்து சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலை பாடி அசத்தினார்.