ராஜராஜ சோழனின் போர்வாள்- மக்கள் முன்னிலையில் மெட்டமைக்கிறார் இளையராஜா!
சென்னை: பாடலாசிரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.
இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ராஜராஜனின் போர்வாள் எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்துக்கான ட்யூன்களை மக்கள் முன்னிலையிலேயே மெட்டமைக்கப் போகிறார் இசைஞானி.

யோகி முதல் நடிகர்
‘யோகி' படத்தில் அமீருடன் நடிகராக அறிமுகமானார் சினேகன். அடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய ‘உயர்திரு 420' என்ற படத்தில் நடித்தார்.

கை கொடுக்காத 420
இப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.

மறுபடியும் ஹீரோவாக
இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்துள்ளது.

இராஜராஜ சோழனின் போர்வாள்
ஆர்.எஸ்.அமுதேஷ்வர் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘இராஜராஜ சோழனின் போர்வாள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ராஜ இசை
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

வரலாற்றிலேயே முதல் முறையாக
சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக மக்கள் முன்னிலையில் இளையராஜா மெட்டமைக, பாடல்கள் தயாராகின்றனவாம்.

ஹீரோயின் யாருப்பா...
படத்தின் ஹீரோயின், இதர தொவில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











