கிங் ஆப் கிங்ஸ்... மலேசியாவில் இளையராஜாவின் புது இசை நிகழ்ச்சி!

By Shankar

சென்னை: இளையராஜாவின் அடுத்த இசை நிகழ்ச்சி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது.

அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இசைப் பயணம் செய்து வருகிறார் இளையராஜா.

அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

மலேசியா - சிங்கப்பூரில்

மலேசியா - சிங்கப்பூரில்

அடுத்து மலேசியா, சிங்கப்பூரில் உள்ள இசை ரசிகர்களுக்கு இசை விருந்து தருகிறார் இசைஞானி.

80களில் லயிக்க வைத்த பாடல்கள்

80களில் லயிக்க வைத்த பாடல்கள்

இளையராஜா 1980-களில் இசையமைத்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களை, அதுவும் இதுவரை எந்த மேடையிலும் பாடப்படாத பாடல்களைப் பாடும் இசை நிகழ்ச்சி கோலாலம்பூரில் டிசம்பர் 28-ந்தேதி நடக்கிறது.

கார்த்திக் ராஜா - வெங்கட்பிரபு

கார்த்திக் ராஜா - வெங்கட்பிரபு

கார்த்திக்ராஜாவுடன் இணைந்து இயக்குநர் வெங்கட்பிரபுவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ராஜா-யுவன்-பவதாரினி-கங்கை அமரன்

ராஜா-யுவன்-பவதாரினி-கங்கை அமரன்

இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரினி, கங்கைஅமரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்கள் பாடுகின்றனர்.

எஸ்.பி.பி - ஹரிணி

எஸ்.பி.பி - ஹரிணி

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், ஹரிணி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள்.

கிங் ஆப் தி கிங்ஸ்

கிங் ஆப் தி கிங்ஸ்

இளையராஜாவின் திரையுலக சேவையை கவுரவிக்கும் விதமாக 'கிங் ஆப் த கிங்ஸ்' என்ற பெயரில் இந்த இசை விழாவை நடத்துகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X