விஜய் 59: போலீஸ் யூனிபார்ம் போடப் போகும் இளைய தளபதி

By Mayura Akilan

விஜய் தனது 59 வது படத்தில் போலீஸ் யூனிபார்ம் போடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்தி பட பஞ்சாயத்து ஒருவழியாக ஓய்ந்துள்ளது. அதற்கு முன்பாகவே சிம்புத்தேவன் இயக்கும் மாரீசன் படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். இந்தப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஹன்சிகா ஏற்கனவே வேலாயுதம் படத்தில் விஜய்க்கு முறைப்பெண்ணாக நடித்திருக்கிறார். இரண்டாவது முறையாக விஜய் உடன் மாரீசன் படத்தில் ஜோடி சேருகிறார் ஹன்சிகா. இதற்கான முதல் ஷெட்யூல் சூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. நம்முடைய கதை அதைப்பற்றியதல்ல.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 59வது படத்தைப் பற்றித்தான். ராஜா ராணி வெற்றி கொடுத்த அட்லி தனது இரண்டாவது படத்தை மாஸ் படமாக்கவேண்டும் என்ற துடிப்போடு விஜய்க்காக எழுதியுள்ள கதையாம் இது.

விஜய் 59 படத்தின் வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. கலைப்புலி எஸ்.தாணு இயக்கும் படம் மாஸ் ஆக இருக்கும் என்று இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது.

நயன்தாரா ஜோடி

நயன்தாரா ஜோடி

விஜய் உடன் பூஜை போடும் முன்பே நீதான் டார்லிங் ஹீரோயின் என்று நயன்தாராவை ஓகே சொல்லி வைத்திருந்தாராம் அட்லி. எற்கனவே வில்லு படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்திருந்தார் நயன்தாரா.

போலீஸ் வேடம்

போலீஸ் வேடம்

விஜய் 59 ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் மீண்டும் போலீஸ் யூனிபார்ம் போடப்போகிறாராம். ஏற்கனவே போக்கிரி, ஜில்லா படங்களில் போலீஸ் ஆக நடித்திருக்கிறார் விஜய்.

ஜி.வி.பிரகாஷ் 50

ஜி.வி.பிரகாஷ் 50

இந்தப் படத்துக்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜி.வி இசையமைக்கும் 50வது படமாக விஜய் - அட்லி படம் இருக்கும். எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவு ஜார்ஜ் வில்லியம்ஸ்.

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

விஜய் 59 படம் 2016 பொங்கல் ரிலீஸ் என்று கூறுகின்றனர். ஆக விஜய் ரசிகர்களுக்கு இன்னுமொரு போக்கிரி பொங்கல் தயாராகிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X