என்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா!

சென்னை : தமிழ் சினிமாவில் ஆரம்பகால கட்டத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது நிஜப்பெயரை சினிமாவிற்காக மாற்றி கொண்டது மட்டுமல்லாமல் அந்த சினிமா பெயருடன் தங்களுக்கான அடைமொழியையும் சிலர் சேர்த்து வைத்து கொண்டனர். சிலர் ரசிகர்கள் கொடுத்த பெயர் ஏற்று கொண்டோம் என்று சொல்லுவது உண்டு. சிலருக்கு ரசிகர்கள் ஏதும் பெயர் வைக்காததால் தங்களாகவே பெயர் வைத்து கொள்வார்கள்.

புரட்சி தலைவர், நடிகர் திலகம், காதல் மன்னன், புரட்சி கலைஞர், இளைய தளபதி, டாப் ஸ்டார், அல்ட்டிமேட் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் என பல அடைமொழி பெயர்களை அடுக்கி கொண்டே போகலாம். இதில் சில பெயர்கள் ரசிகர்கள் தாங்களாகவே முன் வந்து அன்பினால், அதிகம் பாசம் கொண்டு பல பெயர்கள் சில கதாநாயகர்களுக்கு வைத்தார்கள்.

இதில் ஒரு சிலர் அந்த அடைமொழியை கடைசிவரை போட்டு கொள்வார்கள், சிலர் ஒரு சில படங்களில் மட்டும் பயன்படுத்தி விட்டு பின் தங்களின் பெயரை மட்டும் வழக்கம் போல் பயன்படுத்துவார்கள். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப காலத்திற்கு ஏற்ப இந்த பெயர்கள் மாறுவதும் உண்டு.

நிறைய செல்லப்பெயர்கள்

நிறைய செல்லப்பெயர்கள்

இப்போதுள்ள நமக்கு இளைய தளபதி மற்றும் புரட்சி தளபதி போன்ற பெயர்களை கேட்டால் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது "இளைய தளபதி விஜய்" மற்றும் "புரட்சி தளபதி விஷால்" மட்டுமே. விஜய்க்கு இந்த பட்டம் முதலில் "ரசிகன்" என்ற திரைப்படத்திலிருந்து தான் பயன் படுத்தப்பட்டதாம். பலரும் சொல்லும் கருத்து இதுவாக இருந்தாலும் விஜய்க்கு ரசிகர்கள் நிறைய செல்ல பெயர்கள் வைத்து காலத்திற்கு ஏற்ப மாற்றி கொண்டு கூப்பிடுவார்கள்

தளபதி விஜய்

தளபதி விஜய்

இந்நிலையில் எல்லாரும் விஜய்யை இளைய தளபதி என்று அன்போடு அழைத்து வந்த நிலையில் வெற்றி கூட்டணி என்றழைக்கப்படும் அட்லீ & விஜய் கூட்டணியில் 2017 ஆம் ஆண்டு மெர்சல் உருவானது இதில் விஜயின் பெயரை இளைய தளபதியிலிருந்து தளபதி என மாற்றி இருப்பார்கள். அதற்கு முன்பதாகவே பேச்சு வழக்கில் நிறைய ரசிகர்கள் விஜய்யை தளபதி என்று சொல்ல துவங்கினர். தளபதி என்ற படத்தில் நடித்த ரஜினியை காட்டிலும் இந்த பெயர் விஜய்க்கு மிகவும் பாப்புலரானது. ரஜினிக்கு இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டமே நீடிக்கிறது

சேலம் சரவணன்

சேலம் சரவணன்

நடிகரும் , தயாரிப்பாளருமான சரவணன் பொண்டாட்டி ராஜ்ஜியம், தாய் மனசு, நல்லதே நடக்கும், பருத்தி வீரன் மூலமும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் முதன் முதலில் இளையதளபதி என்ற பட்டம் நடிகர் சரவணனுக்கு தான் வைக்கப்பட்டதாம், 1993-ல் வெளியான "நல்லதே நடக்கும்" திரைப்படத்தில் இளைய தளபதி சரவணன் என்று தான் டைட்டில் கார்டில் போட்டுள்ளனர். பின்னாலில் இவர் தனது அடுத்தடுத்த படங்களில் இந்த பட்டத்தை பயன்படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

பிரியம் டைட்டில்

பிரியம் டைட்டில்

தற்போது புரட்சி தளபதி என்றழைக்கப்படுபவர் நடிகர் விஷால், ஆனால் இந்த பெயரை முதன் முதலில் நடிகர் அருண் குமார் (இப்போது அருண் விஜய்) நடிப்பில் வெளியான பிரியம் திரைப்படத்தில் புரட்சி தளபதி அருண்குமார் என்று தான் டைட்டில் கார்டில் போட்டுள்ளனர். பின் இவரும் தனது அடுத்தடுத்த படங்களில் இந்த பட்டத்தை பயன்படுத்தவில்லை. அருண் குமார் அருண் விஜயாக மாறியது தான் அனைவருக்கும் தெரியும். அது மட்டும் அல்லாமல் அவரது கடின உழைப்பால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

வீண் விளம்பரம்

வீண் விளம்பரம்

என்ன தான் நடிகர்களுக்கு பட்டம், அடைமொழிகள் வைத்து கூப்பிட்டாலும் நல்ல நடிகன் என்ற பட்டத்தை தவிர வேறு சிறந்த பட்டம் ஒரு நடிகனுக்கு தேவையில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு பக்கம் நல்ல நடிகனாகவும் மக்கள் மனதில் நல்ல மனிதனாகவும் பெயர் எடுத்தாலே மிக பெரிய சாதனை தான் இன்றைய கால கட்டத்தில். வெறும் அடைமொழி , வித்யாசமான துணை பெயர்கள் வைத்து கொண்டு வீண் விளம்பரம் செய்தால் மீம்ஸ் போட்டு நெட்டிசன்ஸ் ஒரு வழி ஆக்கி விடுவார்கள். இதை புரிந்த கொண்ட பல நடிகர்கள் தேவை இல்லாமல் பில்ட் அப் செய்வதில்லை. ஆனாலும் சிலர் முடிந்தவரை சில காமெடி பெயர்களை வைத்து கொண்டு மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு கொண்டு இருக்கின்றனர்.

Ilayathalapathy Vijay... Puratchi thalapathy Vishal title name

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X