இளையராஜா ராஜ்யசபா எம்.பியாக நியமனம்..ராஜமெளலியின் தந்தைக்கும் அறிவிப்பு..பிரதமர் மோடி பாராட்டு!
சென்னை: இந்தியாவின் எண்ணற்ற மொழிகளில் இசையமைத்து மிகப்பெரிய சாதனை படைத்த இளையராஜா கடந்த மாதம் தனது 79வது பிறந்தநாளை கொண்டாடினார்.
Recommended Video
இந்நிலையில், இளையராஜாவுக்கு சரியான பிறந்தநாள் பரிசாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜமெளலியின் தந்தையும் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களின் திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத்துக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் பரிசா
கடந்த மாதம் ஜூன் 2ம் தேதி தனது 79வது பிறந்தநாளை இளையராஜா கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் பரிசாக இப்படியொரு பதவி கிடைத்துள்ளதா? என ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். இளையராஜாவுக்கு இது சரியான மரியாதை தான் என்றும் பாரத ரத்னா கொடுத்திருந்தால் இன்னமும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்
70களில் இருந்து 2022லும் தனது மாய இசையால் ஒட்டுமொத்த இசையுலகையும் ஆட்சி செய்து இசையரசர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கி உள்ளனர். ஜனாதிபதி கைகளால் பத்ம விருது வாங்கும் புகைப்படத்தை பதிவிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவை மனதார வாழ்த்தி உள்ளார். இந்த பதவிக்கு சரியான ஆள் இளையராஜா என்றும் புகழ்ந்துள்ளார்.

ராஜமெளலி அப்பா
இளையாராஜா, விஜயேந்திர பிரசாத் பிடி உஷா, சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இளையராஜாவை போலவே கலைத் துறையில் இருந்து தேர்வாகி உள்ளார் விஜயேந்திர பிரசாத். பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலியின் அப்பா இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி கதாசிரியர்
இந்திய சினிமாவுக்கு ராஜமெளலி போன்ற மகனை ஈன்றெடுத்த இவர் தான் பாகுபலி, மெர்சல், ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி உள்ளார். கலைத் துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ராஜ்யசபா நியமன எம்பி பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. டோலிவுட் பிரபலங்கள் பலரும் ராஜமெளலி அப்பாவை வாழ்த்தி வருகின்றனர்.

பாரதிராஜா பாராட்டு
வாரியர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர்பான செய்தி கிடைத்ததும், தனது நண்பர் இளையராஜாவை மனமார பாராட்டி உள்ளார் இயக்குநர் பாரதிராஜா. எங்கே போனாலும்... அவன் ஒரு சிறந்த சினிமா கலைஞன்.. என்று நெகிழ்ந்தார். இசையமைப்பாளர் இளையராஜா தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











