இன்ஸ்டாகிராமில் ஆன்ட்ரூவின் போட்டோக்களை நீக்கிய இலியானா: காதல் முறிவா?
Recommended Video
மும்பை: இலியானாவும், அவரின் காதலரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர்.
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார் இலியானா. அவர் கோடிக் கணக்கில் சம்பாதித்து ராணி போன்று வாழ்ந்து கொண்டிருந்தார். பாலிவுட்டில் பெரிய ஆளாகும் ஆசையில் டோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு மும்பையில் செட்டில் ஆனார். பாலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்.
இந்நிலையில் அவரின் காதல் வாழ்க்கை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

இலியானா
இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வந்தார். புகைப்படக் கலைஞர் என்பதால் ஆன்ட்ரூ இலியானாவை வகை வகையாக புகைப்படம் எடுத்தார். அதை இலியானா சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் தான் ஆன்ட்ரூவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார் இலியானா.

ரகசிய திருமணம்
இலியானா ஒரு முறை ஆன்ட்ரூவை கணவர் என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார். இலியானாவுக்கும், ஆன்ட்ரூவுக்கும் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இலியானாவும், ஆன்ட்ரூவும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.

காதல் முறிவு
இலியானா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்த ஆன்ட்ரூவின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். அவர் வாழ்வில் ஆன்ட்ரூ என்று ஒருவர் இல்லாதது போன்று உள்ளது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம். இதையடுத்து ஆன்ட்ரூவும், இலியானாவும் பிரிந்துவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது.

மும்பை
ஆன்ட்ரூவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போட்ட போஸ்டுகளைக் கூட இலியானா நீக்கிவிட்டார் இலியானா. ஆன்ட்ரூ ஆஸ்திரேலியாவில் உள்ளார். இலியானா மும்பையில் உள்ளார். நெடுந்தொலைவில் இருப்பதால் கூட காதலில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த மே மாதம் ஆன்ட்ரூ, இலியானா ஜோடியாக விமான நிலையத்திற்கு வந்தனர். அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை என்று பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











