இவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்
சென்னை: அஜித்தின் 'வலிமை'யில் இன்னொரு ஹீரோயினாக இலியானா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித். வினோத், இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் அஜித், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். இதன் ஷூட்டிங், வரும் 13 ஆம் தேதி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது. அங்கு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் தள்ளி, ஷூட்டிங் 14 ஆம் தேதி தொடங்குகிறது.
அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இவர் தமிழில் கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தவர்.
மற்றொரு ஹீரோயினாக, இலியானா ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர் தமிழில், கேடி, விஜய் நடித்த நண்பன் படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.
இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











