அய்யோ முடியல.. கர்ப்பமாயிட்டேன்.. கருவை கலைத்து விட்டேன்.. தற்கொலை முயற்சி.. நடிகை இலியானா பதிலடி!

சென்னை: நடிகை இலியானா தன்னை சுற்றி வைரலான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கேடி, நண்பன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை இலியானா, டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வருகிறார்.

நடிகை இலியானா தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என்று பரவிய வதந்தி தன்னை மிகவும் அப்செட் ஆக்கியதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் நடிகை இலியானா தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக அவரது வேலைக்காரி தகவல் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் தீயாக ஒரு தகவல் பரவி வந்தது. இந்நிலையில், அதெல்லாம் முற்றிலும் பொய் என நடிகை இலியானா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

காதல் தோல்வி

காதல் தோல்வி

கடந்த 2018ம் ஆண்டு நடிகை இலியானா புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் எனும் வெளிநாட்டவரை காதலித்து வந்தார். அவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் இலியானா. கடந்த 2019ம் ஆண்டு இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

நடிகை இலியானா தனது காதலரை பிரிந்த நிலையில், இலியானா கர்ப்பமாகி இருந்தார் என்றும், அவர் கருக்கலைப்பு செய்து கொண்டார் என்றும், மேலும், காதல் தோல்வி காரணமாக தற்கொலை முயற்சியையும் மேற்கொண்டார் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவை முற்றிலும் ஃபேக் நியூஸ் என சிரித்துக் கொண்டே தனது பேட்டியில் நடிகை இலியானா மனம் திறந்து பேசியுள்ளார்.

வேலைக்காரியே இல்லை

வேலைக்காரியே இல்லை

மேலும், தான் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக தன்னுடைய வேலைக்காரி சொன்னதாக தகவல்கள் பரவின. ஆனால், உண்மையில் எனக்கு வேலைக்காரி என்று யாருமே இல்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன். இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட கதை தான் என்றும், எப்படித் தான் இப்படி போலியான செய்திகளையும் வீண் வதந்திகளையும் பரப்புகின்றனர் என்றும் தெரியவில்லை என்றார்.

அய்யோ முடியல

அய்யோ முடியல

முதலில், இந்த பயங்கரமான வதந்தி பற்றி அறிந்த உடனே மிகவும் வருத்தம் அடைந்தேன். பின்னர், அதிலிருந்து மீண்டு விட்டேன் என நடிகை இலியானா கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் அபிஷேக் பச்சன் நடித்த பிக் புல் படத்தில் பத்திரிகையாளராக நடிகை இலியானா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X