Ileana Baby Bump: நம்புங்க.. நிஜமாவே நான் கர்ப்பமாத்தான் இருக்கேன்.. ஆதாரத்தை காட்டிய இலியானா!

சென்னை: 2006ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேவதாசு மகேஷ் பாபுவின் போக்கிரி படங்கள் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் இலியானா.

அதே ஆண்டு தமிழில் ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் இலியானாவும் தமன்னாவும் இணைந்து நடித்தனர்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா நடிகர் விஜய்யுடன் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ் படங்களில் இலியானா நடிக்கவே இல்லை.

Ileana D Cruz reveals her baby bump and shares pics

நண்பன் நாயகி: பாலிவுட்டில் அமீர்கான், மாதவன், கரினா கபூர் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார் இலியானா.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை பற்றிக் கொள்ள பிரியங்கா சோப்ராவின் பர்ஃபி படம் மூலமாக பாலிவுட்டுக்கு சென்றார். தொடர்ந்து அங்கே பல படங்களில் நடித்த இலியானா தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை இழந்தார்.

மார்க்கெட் மொத்தமா காலி: இந்தி படங்களில் பெரிதாக ஹீரோயின் வாய்ப்பு இலியானாவுக்கு கிடைக்கவில்லை. செகண்ட் ஹீரோயின், சின்ன சின்ன சீன்கள், சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அந்த படம் பெரிதாக ஓடவில்லை என அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட்டில் அவரது மார்க்கெட் காலியாக அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து ஒரு சில படங்கள் மட்டுமே ஒரு வருஷத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டு வருஷத்துக்கு ஒன்றோ கிடைக்க ஆரம்பித்தது.

Ileana D Cruz reveals her baby bump and shares pics

திருமணம் செய்யாமல் கர்ப்பம்: இந்நிலையில், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இலியானா. அது எப்படி திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகலாம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் இலியானாவை ட்ரோல் செய்தனர்.

மேலும், அந்த கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதையும் இன்னமும் நடிகை இலியானா ரிவீல் செய்யாமல் இருப்பது மேலும், பல ட்ரோல் மீம்களுக்கு வழி வகுத்துள்ளது.

Ileana D Cruz reveals her baby bump and shares pics

பேபி பம்ப் போட்டோ: இலியானா சும்மா சொல்கிறார். வெறும் டிசர்ட் போட்டோவை மட்டும் வெளியிட்டு தான் கர்ப்பம் என அறிவித்தால் எப்படி நம்புவது என நெட்டிசன்கள் போட்ட கமெண்ட்டை படித்து விட்டாரோ என்னவோ தற்போது பேபி பம்ப் போட்டோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இலியானா.

Ileana D Cruz reveals her baby bump and shares pics

கர்ப்பத்துக்கு யார் காரணம்?: ஆனால், இன்னமும் குழந்தைக்கு யார் காரணம் என்பதை இலியானா அறிவிக்கவில்லை. கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தார் இலியானா. இருவரும் அதே ஆண்டு திருமணம் செய்துக் கொண்டதாகவும் பின்னர் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்னமும் அந்த விஷயத்தைக் கூட இலியானா ரிவீல் செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X