கர்ப்பத்துக்கு காரணமானவர் இவர் தான்.. போட்டோவை தெளிவா வெளியிட்ட இலியானா.. அதிலும் ஒரு ட்விஸ்ட்!
மும்பை: நடிகை இலியானா தனது கர்ப்பத்துக்கு காரணமானவரை வைத்து புதிர் போட்டி நடத்தி வருவதாகவே தெரிகிறது. முதலில் ஒரு டிசர்ட் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார்.
அதன் பின்னர், தனது பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு கர்ப்பத்துக்கு யார் காரணம் கண்டுபிடிங்க என்பது போல வேடிக்கை காட்டினார்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தனது பார்ட்னரின் பிளர் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு வெறுப்பேற்றிய இலியானா ஒரு வழியாக தனது கர்ப்பத்துக்கு காரணமானவரின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

திருமணம் ஆகாமலே கர்ப்பம்: நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்பது போலத்தான் சமீப காலமாக பல நடிகைகள் திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகி வருகின்றனர். நடிகை எமி ஜாக்சனை போல இலியானாவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் கர்ப்பம் ஆன நிலையில், கடந்த சில மாதங்களாகவே தனது பார்ட்னர் யார் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் ஏகப்பட்ட பீடிகைகளை போட்டு வந்தார்.
கர்ப்பமாக நடிகை இலியானா இருக்கிறாரா? அல்லது சும்மா சொல்கிறாரா என டிசர்ட் போட்டோவால் குழம்பி இருந்த ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்திருந்தார் நண்பன் பட நாயகி.
கேடி ஹீரோயினின் காதலர்: நடிகை இலியானா கடந்த 2018ம் ஆண்டு வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இலியானாவும் அந்த போட்டோகிராபர் ஆண்ட்ரூ நீபோனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பின. அதன் பின்னர் இருவரும் சில மாதங்களிலேயே பிரேக்கப் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்னொரு வெளிநாட்டினர் உடன் நடிகை இலியானா காதல் வலையில் விழுந்து கர்ப்பமும் ஆகியிருக்கிறார்.
யார் அந்த மிஸ்டரி மேன்: நடிகை இலியானா சமீபத்தில் தனது பார்ட்னர் உடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தார். ஆனால், அதில், அவருடைய முகம் பிளர் செய்யப்பட்டு இருந்தது. ஏதாவது பெரிய பாலிவுட் நடிகரா? என பல கேள்விகள் வெடித்த நிலையில், தற்போது டேட் நைட் என்கிற கேப்ஷன் உடன் தனது குழந்தைக்கு காரணமானவரின் முழு உருவத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார் இலியானா.
ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட்டாக அந்த நபரின் பெயரை இலியானா சொல்லாமல் இன்னமும் சஸ்பென்ஸை தொடர்கிறார். விரைவில் தனது பார்ட்னரின் பெயரை இன்னொரு போஸ்ட் மூலம் இலியானா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போட்டோவில் உள்ள நபர் யார் என்பது குறித்த தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











