Ileana D Cruz Husband: தனது கர்ப்பத்துக்கு இவர் தான் காரணம்.. போட்டோவை வெளியிட்ட இலியானா.. ஆனால்?
மும்பை: நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராமில் தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை ஒருவழியாக போட்டோ போட்டே ரிவீல் செய்து விட்டார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. தமிழில் ரவி கிருஷ்ணா, தமன்னா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர், ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான நண்பன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
பாலிவுட் மோகம்: டோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்த இலியானாவுக்கு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற ஆசை வந்தது. பிரியங்கா சோப்ரா நடித்த பர்ஃபி படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்த இலியானாவுக்கு பாலிவுட்டில் அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்து காத்திருந்தார். ஆனால், தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் பெரிதாக ஷைன் ஆகாததை போலவே இலியானாவுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அபிஷேக் பச்சன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் படங்களில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்த இலியானா சமீப காலமாக சினிமாவை விட்டு விலகி தனது வயிற்றில் வளரும் குழந்தைக்காக ஓய்வெடுத்து வருகிறார்.
கல்யாணம் ஆகாமல் கர்ப்பம்: சினிமாவில் திருமணம் ஆகாமல் கர்ப்பம் செய்துக் கொள்வதும், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வதையும் சில நடிகைகள் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், நடிகை இலியானாவும் தற்போது திருமணம் ஆகாமல் கர்ப்பம் ஆகி உள்ளார்.
மேலும், தனது கணவர் யார் என்பதை இதுவரை அவர் ரீவில் செய்யாமல் சஸ்பென்ஸ் படம் போல ரகசியமாகவே வைத்திருக்கிறார். பாலிவுட் வட்டாரமே இலியானாவின் கருவுக்கு யார் காரணம் என்கிற கேள்வியை எழுப்பி தலையை பிய்த்துக் கொண்டு வருகிறது.

பார்ட்னர் போட்டோ: இந்நிலையில், தற்போது திடீரென கர்ப்பம் ஆவதே ஒரு தலை சிறந்த அனுபவம் என குழந்தை வயிற்றில் வளர்வது குறித்த தத்துவங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகை இலியானா தனது கர்ப்பத்துக்கு காரணமான பார்ட்னர் உடன் இருக்கும் போட்டோவையே வெளியிட்டுள்ளார்.
ஆனால், ட்விஸ்ட்: நடிகை இலியானா மங்கலான வெளிச்சத்தில் ஒரு மார்க்கமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவை ரசிகர்கள் ஜூம் அடித்து பார்த்தாலும், இலியானாவின் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்பதை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. விரைவில் இலியானாவே அடுத்த போஸ்ட்டில் தனது வருங்கால கணவர் யார் என்பதை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications