Ileana Baby: ஆண் குழந்தைக்கு அம்மாவான இலியானா.. அழகு செல்லத்தின் முகத்தையே காட்டி மகிழ்ச்சி!

சென்னை: தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த இலியானாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 36 வயதாகும் நடிகை இலியானா சமீப காலமாக வெளிநாட்டினர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்த நிலையில், கர்ப்பமாகி விட்டேன் என்பதை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

திருமணம் ஆகாமல் நடிகை இலியானா கர்ப்பமானது பெரும் பேச்சாக மாறிய நிலையில், அவரது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை புதிர் போட்டி போல நடத்தி கடைசியாக காதலரை அறிமுகப்படுத்தி இருந்தார்.

Ileana DCruz introduces her infant baby to the world with name and photo

இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது என்றும் அந்த குழந்தையின் பெயர் இதுதான் என குழந்தையின் அழகிய புகைப்படத்துடன் போஸ்ட் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இலியானாவுக்கு ஆண் குழந்தை: 2006ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேவதாஸு, போக்கிரி படங்களில் அறிமுகமான நடிகை இலியானா, அதே ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார். மேலும், 2 தெலுங்கு படங்கள் என அறிமுகமான ஆண்டிலேயே 5 படங்களை ரிலீஸ் செய்து அமர்க்களப்படுத்திய இலியானா டோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக மாறினார்.

36 வயதாகும் நடிகை இலியானா சில வெளிநாட்டினர்களுடன் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடைசியாக ஒரு வெளிநாட்டினருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார்.

Ileana DCruz introduces her infant baby to the world with name and photo

குழந்தைக்கு க்யூட்டான பெயர்: கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தனது மகன் பிறந்தார் என்றும் அந்த குழந்தைக்கு கோவா பீனிக்ஸ் டோலன் (Koa Phoenix Dolan) எனப் பெயரிட்டுள்ளார். அதன் அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை இலியானாவின் அழகிய ஆண் குழந்தையின் முகத்தை பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இலியானாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ileana DCruz introduces her infant baby to the world with name and photo

பார்ட்னர் பெயர் இதுதானா: கோவா என்பது தான் குழந்தையின் பெயர் என்றும் பீனிக்ஸ் டோலன் என்பது இலியானாவின் பார்ட்னர் பெயராகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட், டோலிவுட் என ஏகப்பட்ட பிரபலங்களும் இலியானாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X