ரூ. 2 கோடிப்பு: இலியானாவை பார்த்து குமுறும் நடிகைகள்
ஹைதராபாத்: தெலுங்கு படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ள இலியானாவை பார்த்து சில நடிகைகள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. அப்பொழுதே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கிய அவர் திடீர் என்று மூட்டையை கட்டிக் கொண்டு பாலிவுட்டுக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
டோலிவுட் போன்று பாலிவுட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.

இலியானா
ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் ரவி தேஜா நடித்துள்ள அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் இலியானா டோலிவுட்டுக்கு திரும்பி வந்துள்ளார். 6 ஆண்டுகள் கழித்து அவர் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த தெலுங்கு படத்தின் ஹீரோவும் ரவி தேஜா தான். முன்னதாக அவர்கள் 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 கோடி
அமர் அக்பர் அந்தோணி படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். தெலுங்கு படங்களில் நடிக்காவிட்டாலும் இலியானாவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர்கள் அதிகம். அதனால் தான் அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

வியப்பு
பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்துள்ள ஒரு நடிகைக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுத்திருப்பது டோலிவுட் நடிகைகளை வியப்படைய வைத்துள்ளது. வழக்கமாக கம்பேக் நடிகைக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். இந்த இலியானாவுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலாம் நமக்கு கொடுக்காத சம்பளத்தை அவருக்கு கொடுக்கிறார்கள் என்று சில முன்னணி நடிகைகள் குமுறுகிறார்களாம்.

நியூயார்க்
அமர் அக்பர் அந்தோணி படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நகரில் துவங்கியது. படத்தை அக்டோபர் 5ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள், டப்பிங் தாமதமானதால் ரிலாஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் 14ம் தேதி ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











