பீட்டாவுக்கு புறமுதுகை காட்டிய இலியானா
மும்பை: நடிகை இலியானா பீட்டா அமைப்புக்கு மேலாடையின்றி பேக்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.
பீட்டா அமைப்புக்கு உலக பிரபலங்கள், நடிகர், நடிகைகள் போஸ் கொடுத்துள்ளனர். அதில் பல பிரபலங்கள் விலங்குகளின் தோலால் ஆன ஆடையை அணியாதீர்கள் என்று கூறி நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர்.
ஒரு சிலரே ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

இலியானா
டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டிலான இலியானா பீட்டாவுக்காக போஸ் கொடுத்துள்ளார்.

தோல்
இலியானா மேலாடையின்றி முதுகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அங்கோரா ரோமம், தோலுக்கு நோ சொல்லுங்கள் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

டி-சர்ட்
பீட்டா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலியானா கருப்பு நிற டி-சர்ட்டில் ஃபர்(தோல்) என்று எழுதி அடிக்கப்பட்டிருந்தது.

முயல்கள்
முயல்களை கொடுமைப்படுத்துகிறார்கள். அவை உயிருடன் இருக்கையில் அதன் ரோமங்களை பிடுங்கி எடுக்கிறார்கள் என்றார் இலியானா.

வாங்காதீர்கள்
அங்கோரா ரோமத்தை வைத்து ஸ்வெட்டர், ஸ்கார்ப் செய்கிறார்கள். அப்படி அங்கோரா ரோமத்தால் ஆன பொருட்களை தயது செய்து வாங்காதீர்கள் என்று இலியானா கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











