80 நாள் சவால்.. உண்மைதான், அதற்கு அடிமையாகி விட்டேன்.. ஒப்புக்கொண்ட ஒல்லிபெல்லி ஹீரோயின் இலியானா!
சென்னை: அந்த விஷயத்துக்கு, தான் அடிமையாகிவிட்டதாக நடிகை இலியானா கூறியுள்ளார்.
தமிழில், கேடி, விஜய் நடித்த நண்பன் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர், இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

காதல் தத்துவம்
இந்நிலையில், திடீரென இருவரும் பிரிந்தனர். இதனால், தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கினார் இலியானா. பின்னர் காதல் பற்றி தத்துவமாக சில விஷயங்களை தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பானது. அதுபற்றி கேட்டபோது, அது தனிப்பட்ட விஷயம் என்றும் அதைப்பற்றி வெளியில் பேச விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஒர்க் அவுட் புகைப்படம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர். அடிக்கடி, தனது ஒர்க் அவுட் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், கூடவே ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வதும் வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த புதிய புகைப்படம் வைரலானது. ஏற்கனவே ஒல்லி தோற்றம் கொண்ட 33 வயது இலியானா, அதில் மிகவும் ஒல்லியாகி இருந்தார்.

எனக்கு மகிழ்ச்சி
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ஒர்க் அவுட்டுக்கு தான் அடிமையாகி விட்டதாகக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த லாக்டவுன் நேரத்தை நான் பயனுள்ளதாக எடுத்துக்கொண்டேன். 80 நாள் ஒர்க் அவுட் சவாலை ஏற்றுக்கொண்டு செய்தேன். தினமும் காலையில் ஒரு மணி நேரம் ஒர்க் அவுட். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை முடித்துவிட்டுதான் எனது வழக்கமான வேலைகளை தொடர்வேன்.

அமெரிக்காவில் குடும்பம்
இப்போது அது இல்லாமல் முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எனது குடும்பத்தினர் கடந்த 8 மாதங்களாக அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அனுமதிக்கப்பட்டதும் முதல் விமானத்தில் அமெரிக்கா செல்கிறேன். அங்கு என்னை தனிமைப்படுத்துக்கொண்டு பிறகு குடும்பத்துடன் இணைய வேண்டும். இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











