twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூகாம்பிகைக்கு இளையராஜா வைரக் கைகள் காணிக்கை கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ரூ. 27.84 லட்சம் மதிப்புள்ள வைரக் கைகளை இசைஞானிஇளையராஜா காணிக்கையாக அளித்துள்ளார்.கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு இளையராஜா தனது மனைவி ஜீவா, மகள் பவதாரணி ஆகியோருடன்சனிக்கிழமை சென்றார். அங்கு வைரக் கைகளை காணிக்கையாக வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின்போது சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டன. தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் அடிகா பூஜைகளை செய்தார்.அம்மன் சன்னதியில் நெய் விளக்கேற்றி இளையராஜாவும், குடும்பத்தினரும் வழிபட்டனர்.பின்னர் கோவில் நிர்வாகிகளை சந்தித்த ராஜா, அம்மனுக்கு ரூ. 70 லட்சம் மதிப்பில் வைரக் கிரீடம் வழங்கப் போவதாகஅறிவித்தார். இந்த சந்திப்பின்போது உடுப்பி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷியாம் பட், எம்.எல்.ஏ. கோபால் பூஜாரி, உடுப்பிநகர்ப்புற வளர்ச்சி ஆணையர் அஜீத் குமார் ஹெக்டே ஆகியோரும் உடனிருந்தனர்.வழிபாட்டுக்குப் பின்னர் வெளியே வந்த ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,1974ல் மூகாம்பிகையை தரிசிக்க நான் இங்கு வந்தேன். அப்போது நான் இசையமைப்பாளர் இல்லை, அம்மனின் பக்தன் கூடகிடையாது. எனது நண்பருடன் இங்கு வந்தேன். சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து பாடினேன். அன்று முதல் எனதுவாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.அதன் பிறகு எதைச் செய்தாலும் அம்மனின் ஆசியோடுதான் தொடங்குவேன். வைரக் கைகளை காணிக்கையாக தருவதாக 5ஆண்டுகளுக்கு முன்பு வாக்கு கொடுத்தேன். அதை இப்போது நிறைவேற்றியுள்ளேன்.நான் எப்போதுமே எதையுமே அம்மனிடம் கேட்டதில்லை. எல்லாம் அவள் கொடுத்தது. அதைத் திருப்பிக் கொடுக்க ஒருவாய்ப்பை அம்மன் எனக்கு அருளினார், இப்போது திருப்பிக் கொடுக்கிறேன் என்றார் ராஜா.திருப்பதியில் ரஜினி:இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் தரிசனம் செய்தார்.சென்னையிலிருந்து கார் மூலம் ரஜினி மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றனர். சனிக்கிழமை காலை ரஜினியும்,குடும்பத்தினரும் வைகுண்டம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.ரஜினி வருவதை அறிந்த பக்தர்கள் கோவில் ராஜகோபுரம் முன்பு கூடிவிட்டனர். ரஜினி வெளியே வந்தபோது அவரைமுற்றுகையிட்டு ஆரவாரம் செய்தனர். பலர் சந்திரமுகியில் ரஜினி செய்வதைப் போல லகலகலகலக என்று சப்தம் எழுப்பிகூச்சலிட்டனர்.அவர்களை நோக்கி கையசைத்து விட்டு ரஜினி கிளம்பிச் சென்றார்.தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அங்குள்ள சினிமா வசூல் சாதனைகளைமுறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    By Staff
    |

    கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ரூ. 27.84 லட்சம் மதிப்புள்ள வைரக் கைகளை இசைஞானிஇளையராஜா காணிக்கையாக அளித்துள்ளார்.

    கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு இளையராஜா தனது மனைவி ஜீவா, மகள் பவதாரணி ஆகியோருடன்சனிக்கிழமை சென்றார். அங்கு வைரக் கைகளை காணிக்கையாக வழங்கினார்.


    இந்த நிகழ்ச்சியின்போது சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டன. தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் அடிகா பூஜைகளை செய்தார்.அம்மன் சன்னதியில் நெய் விளக்கேற்றி இளையராஜாவும், குடும்பத்தினரும் வழிபட்டனர்.

    பின்னர் கோவில் நிர்வாகிகளை சந்தித்த ராஜா, அம்மனுக்கு ரூ. 70 லட்சம் மதிப்பில் வைரக் கிரீடம் வழங்கப் போவதாகஅறிவித்தார். இந்த சந்திப்பின்போது உடுப்பி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷியாம் பட், எம்.எல்.ஏ. கோபால் பூஜாரி, உடுப்பிநகர்ப்புற வளர்ச்சி ஆணையர் அஜீத் குமார் ஹெக்டே ஆகியோரும் உடனிருந்தனர்.

    வழிபாட்டுக்குப் பின்னர் வெளியே வந்த ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    1974ல் மூகாம்பிகையை தரிசிக்க நான் இங்கு வந்தேன். அப்போது நான் இசையமைப்பாளர் இல்லை, அம்மனின் பக்தன் கூடகிடையாது. எனது நண்பருடன் இங்கு வந்தேன். சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து பாடினேன். அன்று முதல் எனதுவாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    அதன் பிறகு எதைச் செய்தாலும் அம்மனின் ஆசியோடுதான் தொடங்குவேன். வைரக் கைகளை காணிக்கையாக தருவதாக 5ஆண்டுகளுக்கு முன்பு வாக்கு கொடுத்தேன். அதை இப்போது நிறைவேற்றியுள்ளேன்.

    நான் எப்போதுமே எதையுமே அம்மனிடம் கேட்டதில்லை. எல்லாம் அவள் கொடுத்தது. அதைத் திருப்பிக் கொடுக்க ஒருவாய்ப்பை அம்மன் எனக்கு அருளினார், இப்போது திருப்பிக் கொடுக்கிறேன் என்றார் ராஜா.

    திருப்பதியில் ரஜினி:

    இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் தரிசனம் செய்தார்.

    சென்னையிலிருந்து கார் மூலம் ரஜினி மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றனர். சனிக்கிழமை காலை ரஜினியும்,குடும்பத்தினரும் வைகுண்டம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    ரஜினி வருவதை அறிந்த பக்தர்கள் கோவில் ராஜகோபுரம் முன்பு கூடிவிட்டனர். ரஜினி வெளியே வந்தபோது அவரைமுற்றுகையிட்டு ஆரவாரம் செய்தனர். பலர் சந்திரமுகியில் ரஜினி செய்வதைப் போல லகலகலகலக என்று சப்தம் எழுப்பிகூச்சலிட்டனர்.

    அவர்களை நோக்கி கையசைத்து விட்டு ரஜினி கிளம்பிச் சென்றார்.

    தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அங்குள்ள சினிமா வசூல் சாதனைகளைமுறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X