twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரைக்கு வரும் இசைஞானிஇசைஞானி இளையராஜா, முதல் முறையாக சின்னத்திரையில் (டி.வி.) இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.நேற்றும் இன்றும் என்றும் என்ற தலைப்பில் ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சியை இளையராஜா நடத்தவுள்ளார். அவரது இசை வாழ்க்கையில்,டிவி ஒன்றில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.இந் நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் இளையராஜா கூறுகையில், நான் அதிகம் வெளி நிகழ்ச்சிகளை நடத்தியதில்லை. ஸ்ரீரங்கம்கோவிலில் ஒருமுறை செய்துள்ளேன். இலங்கையில் 3 முறை நடத்தியுள்ளேன். அன்னக்கிளி படம் வெளியானபோது மலேசியாவில்ஒருமுறை இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். அவ்வளவுதான்.அதிக அளவில் நான் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. எனக்கு விருப்பமில்லாததால்தான் அதிகம் நடத்தவில்லை. ஆனால்திருவாசகம் இசை வெளியீட்டு விழாவின்போது எனது ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பை உணரும் வாய்ப்பு ஏற்பட்டது.பல ரசிகர்கள் விழாவைப் பார்க்க முடியாமல் திரும்பிப் போனார்கள். பலர் எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று முட்டிமோதியதில் பலருக்கு தலையில் ரத்தக் காயம். இது என்னை அதிகம் பாதித்துவிட்டது.என் மீது இப்படி அன்பு கொண்ட ரசிகர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் மூழ்கியிருந்த இரண்டாவது நாளில்ஜெயா டிவியிலிருந்து வந்து, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டார்கள். உடனே ஒத்துக் கொண்டேன்.இது எனது ரசிகர்களுக்கான எனது விருப்பம். இந்த நிகழ்ச்சியில் நான் பல புதுமைகளை செய்யவுள்ளேன். மனிதனின் வாழ்க்கையில்எப்படி இசை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த இசை நிகழ்ச்சி இருக்கும்.எனது வாத்தியக் குழுவினரே இதற்கு இசையமைக்கவுள்ளனர். இன்னொரு புதுமையும் இதில் இடம் பெறவுள்ளது.அதாவது, மூன்றே ஸ்வரங்களில் ஒரு பாடலை நான் வடிவமைத்துள்ளேன். 4 நிமிடங்கள் இப்பாடல் ஒலிக்கும். இதுவரை யாரும் 3ஸ்வரங்களில் பாடல் வடித்ததில்லை. உலகிலேயே இது முதல் முறை என்று கூட சொல்லலாம்.மேலும், எனது பழைய பாடல்கள் சிலவற்றை மாற்றி அமைத்து அதை ரசிகர்களுக்குக் கொடுக்கப் போகிறேன். இது ரசிகர்களுக்கு பெரும்ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். அதே நேரத்தில் எனது இசை நிகழ்ச்சியில் ரீமிக்ஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.இசை என்பது உணர்வு. அதை மாற்றி அமைக்க முடியாது. ரீமிக்ஸ் என்பது பாப்கார்ன் மாதிரி. எது நல்லது, உகந்தது என்பதை மக்கள்புரிந்து கொள்வார்கள் என்றார் இளையராஜா.இசைஞானியின் இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.16ம் தேதி நடைபெறும் விழாவின்போது இளையராஜாவுக்குப் பாராட்டு விழாவும நடைபெறுகிறது. 3 முறை தேசிய விருது பெற்றது,5,000 பாடல்கள் வரை இசையமைத்தது, திருவாசகம் இசைத் தொகுப்பை வெளியிட்டது உள்ளிட்ட சாதனைகளுக்காக இளையராஜாபாராட்டப்படவுள்ளார்.

    By Staff
    |

    இசைஞானி இளையராஜா, முதல் முறையாக சின்னத்திரையில் (டி.வி.) இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.

    நேற்றும் இன்றும் என்றும் என்ற தலைப்பில் ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சியை இளையராஜா நடத்தவுள்ளார். அவரது இசை வாழ்க்கையில்,டிவி ஒன்றில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

    இந் நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் இளையராஜா கூறுகையில், நான் அதிகம் வெளி நிகழ்ச்சிகளை நடத்தியதில்லை. ஸ்ரீரங்கம்கோவிலில் ஒருமுறை செய்துள்ளேன். இலங்கையில் 3 முறை நடத்தியுள்ளேன். அன்னக்கிளி படம் வெளியானபோது மலேசியாவில்ஒருமுறை இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். அவ்வளவுதான்.

    அதிக அளவில் நான் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. எனக்கு விருப்பமில்லாததால்தான் அதிகம் நடத்தவில்லை. ஆனால்திருவாசகம் இசை வெளியீட்டு விழாவின்போது எனது ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பை உணரும் வாய்ப்பு ஏற்பட்டது.

    பல ரசிகர்கள் விழாவைப் பார்க்க முடியாமல் திரும்பிப் போனார்கள். பலர் எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று முட்டிமோதியதில் பலருக்கு தலையில் ரத்தக் காயம். இது என்னை அதிகம் பாதித்துவிட்டது.

    என் மீது இப்படி அன்பு கொண்ட ரசிகர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் மூழ்கியிருந்த இரண்டாவது நாளில்ஜெயா டிவியிலிருந்து வந்து, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டார்கள். உடனே ஒத்துக் கொண்டேன்.

    இது எனது ரசிகர்களுக்கான எனது விருப்பம். இந்த நிகழ்ச்சியில் நான் பல புதுமைகளை செய்யவுள்ளேன். மனிதனின் வாழ்க்கையில்எப்படி இசை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த இசை நிகழ்ச்சி இருக்கும்.

    எனது வாத்தியக் குழுவினரே இதற்கு இசையமைக்கவுள்ளனர். இன்னொரு புதுமையும் இதில் இடம் பெறவுள்ளது.

    அதாவது, மூன்றே ஸ்வரங்களில் ஒரு பாடலை நான் வடிவமைத்துள்ளேன். 4 நிமிடங்கள் இப்பாடல் ஒலிக்கும். இதுவரை யாரும் 3ஸ்வரங்களில் பாடல் வடித்ததில்லை. உலகிலேயே இது முதல் முறை என்று கூட சொல்லலாம்.

    மேலும், எனது பழைய பாடல்கள் சிலவற்றை மாற்றி அமைத்து அதை ரசிகர்களுக்குக் கொடுக்கப் போகிறேன். இது ரசிகர்களுக்கு பெரும்ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். அதே நேரத்தில் எனது இசை நிகழ்ச்சியில் ரீமிக்ஸ் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

    இசை என்பது உணர்வு. அதை மாற்றி அமைக்க முடியாது. ரீமிக்ஸ் என்பது பாப்கார்ன் மாதிரி. எது நல்லது, உகந்தது என்பதை மக்கள்புரிந்து கொள்வார்கள் என்றார் இளையராஜா.

    இசைஞானியின் இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

    16ம் தேதி நடைபெறும் விழாவின்போது இளையராஜாவுக்குப் பாராட்டு விழாவும நடைபெறுகிறது. 3 முறை தேசிய விருது பெற்றது,5,000 பாடல்கள் வரை இசையமைத்தது, திருவாசகம் இசைத் தொகுப்பை வெளியிட்டது உள்ளிட்ட சாதனைகளுக்காக இளையராஜாபாராட்டப்படவுள்ளார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X