சென்னையில் புதுப்பட திருட்டு டிவிடி கும்பல் சிக்கியது
சென்னை: ஆயிரத்தில் ஒருவன், வேட்டைக்காரன், குட்டி, நாணயம் உள்ளிட்ட புதிய சினிமா பட திருட்டு டிவிடிக்களை தயார் செய்து விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள சுமார் 5550 டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை தண்டையார்பேட்டை, பர்மாபஜார், சைனா பஜார் உள்ளிட்ட இடங்களில் புதிதாக திரைக்கு வந்த சினிமா படங்கள், ஆபாச படங்கள் திருட்டு டிவிடிக்களாக தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை, அன்னை சத்யா நகர், தண்டையார் பேட்டை நேதாஜி நகர், பர்மா பஜார், ரத்தன் பஜார், சைனா பஜார் மற்றும் அண்ணாசாலை ஆகிய பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுவண்ணாரப்பேட்டை அன்னை சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் ரைட்டிங் மிஷின்கள் மூலம் சினமா பட டிவிடிக்களையும், ஆபாச பட டிவிடிக்களையும் தயாரித்து வந்த பாலசுந்தரம் (20), ஜெய்சங்கர் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் நேதாஜி நகரில் நாகூர்கனி (24), சைனாபஜாரைச் சேர்ந்த மோகன் (46), பர்மாபஜாரைச் சேர்ந்த கணேசன் (24), ரத்தன் பஜாரைச் சேர்ந்த உமர்ரசீன் மற்றும் அண்ணாசாலை சத்தியமூர்த்தி ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்தில் ஒருவன், வேட்டைக்காரன், குட்டி, நாணயம் உள்ளிட்ட 5,100 சினிமா பட டிவிடிக்களும், 450 ஆபாச பட டிவிடிக்களும், 4 ரைட்டிங் மிஷின்களும், 134 ரைட்டர்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 7 பேரும் புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











