நான் தான் விஜய்.. நீலாங்கரை வீட்டு வாசலில் அலப்பறை செய்த முத்திய விஜய் பக்தர்? கூட்டணி பேசனுமாம்
சென்னை: நடிகர் விஜய் தான் அடுத்த முதலமைச்சர் ஆகப்போகிறார் என்று அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், பலரும் விஜய் எப்போது முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று எல்லாம் கேட்டு வருகிறார்கள். இப்படி இருக்கையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க பெரும்பான்மையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்படி இருக்கும் போது, பலரும் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் கொஞ்சம் முத்திப் போன விஜய் ரசிகர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்துடன் நேராக விஜய்யின் நீலாங்கரை வீட்டு வாசலுக்கு வந்து, நான் தான் விஜய், விஜய் தான் நான், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளேன். விஜய் முதலமைச்சர் ஆவார், நான் தான் விஜய், என்னை முதலமைச்சர் தளபதி விஜய்னு கூப்பிடுங்க. எனது தாய் மாமா இவர், நான் இந்த முகவரியில் குடியிருக்கிறேன் என்று கூறிக் கொண்டு, கோவில் விழாக்களில் அருள் வந்து சாமி ஆடி குறி சொல்பவர் போல சொல்லிக் கொண்டிருந்தார்.

இவரது இந்த நடவடிக்கையை பார்த்த சிலரோ, இவர் கொஞ்சம் முத்திப்போன விஜய் ரசிகர் போல, இப்படியும் ஒருத்தர் இருக்கிறார் பாருங்களேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, கூட்டத்திற்குள் இருந்த சிலர், அந்த முத்திப்போன ரசிகரிடம் சென்று, தளபதி விஜய் வாழ்க, முதலமைச்சர் விஜய் வாழ்க, தளபதி, டிவிகே என்று எல்லாம் கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர். இதைப் பார்த்த பலரும் மேலும் ஷாக் ஆகிவிட்டனர். எவ்வளவு நேரம் நல்லாத்தானே நின்னுகிட்டு இருந்தாங்க, திடீர்னு இப்படி கோஷம் போட ஆரம்பிச்சுட்டாங்களே என்று பதிவிட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications