கலர்ஸ் டிவியில் நயன்.. பிக் பாஸ் 3லாம் இல்லங்க.. ஆனா, ஆரம்பமே அமர்க்களம் தான்!

இமைக்கா நொடிகள் படம் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

சென்னை: கலர்ஸ் டிவியில் நயன் தாரா என்ற அறிவிப்பின் பின்னணி குறித்த உண்மையான நிலவரம் தெரிய வந்துள்ளது.

லேடி சூப்பர்ஸ்டாராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் நயன்தாரா. ரஜினியுடன் தர்பார், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என கை நிறைய படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் 'கலர்ஸ் டிவியில் நயன்தாரா' என்ற அறிவிப்பு கலர்ஸ் டிவியில் வெளியானது. இதனைப் பார்த்ததும் கமல், விஜய் சேதுபதி, விஷால் மற்றும் வரலட்சுமி வரிசையில் நயனும் சின்னத்திரைக்கு வந்து விட்டார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது.

பிக் பாஸ் 3:

பிக் பாஸ் 3:

ஆளாளுக்கு நயன் இந்த நிகழ்ச்சியைத் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என யூகிக்கத் தொடங்கி விட்டனர். அதில் நிறைய பேர் கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது, அதனை நயன் தான் தொகுத்து வழங்குகிறார் என சமுகவலைதளங்களில் பதிவிட்டனர்.

குழப்பம்:

குழப்பம்:

எனவே, இது தொடர்பான குழப்பம் நீடித்து வந்தது. தனது பிசியான வேலைகளுக்கு இடையே அவர் எப்படி பிக் பாஸ் சீசன் 3யை தொகுத்து வழங்குவார். அப்படியே அவர் தொகுத்து வழங்கினாலும், அது ரசிக்கும்படி இருக்குமா என நெட்டிசன்கள் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.

இமைக்கா நொடிகள்:

இப்படியாக பல்வேறு யூகங்களும், வதந்திகளும் பரவி வந்த நிலையில், தற்போது தான் ஆரம்பித்து வைத்த பரபரப்பிற்கு தானே விடையைத் தந்து விட்டது கலர்ஸ் டிவி. ஆம், கலர்ஸ் டிவியில் வரும் 12ம் தேதி நயன் நடித்த இமைக்கா நொடிகள் படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனைத் தான், அவர்கள் அப்படி சூசகமாக, சுவாரஸ்யத்திற்காக டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

முதல் தமிழ்ப் படம்:

முதல் தமிழ்ப் படம்:

சரி, நயன் படம் போடுவதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? கலர்ஸ் டிவியில் இதுவரை நேரடி தமிழ்ப் படங்களே போட்டது இல்லையாம். நயன் படம் தான் முதல் தமிழ்ப் படமாம். அதனால் தான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்பமே அமர்க்களம்:

ஆரம்பமே அமர்க்களம்:

க்ரைம் த்ரில்லர் படமான இமைக்கா நொடிகள் குடும்பம், செண்டிமெண்ட், நல்ல கருத்து என எல்லாம் கலந்து, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். எனவே, கலர்ஸ் டிவியில் முதல் தமிழ்ப் படமே அமர்க்களமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமேயில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X