நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கும் அதர்வா படம் ஷூட்டிங் நிறைவு... அடுத்த படத்தில் போலீஸ்!
Recommended Video

சென்னை : கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'.
அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
அதர்வா ஜோடியாக தெலுங்கு திரையுலகத்தின் பிரபல நாயகி ராஷி கண்ணா நடிக்கிறார். ராஷி கண்ணா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

விஜய் சேதுபதி
'இமைக்கா நொடிகள்' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதனால், இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப் இப்படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். பாலிவுட் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இயக்குநராக இருக்கும் அனுராக் காஷ்யப் தமிழ் சினிமா தனக்கு விருப்பமானது எனக் கூறியுள்ளார். நல்ல தமிழ்ப் படங்கள் மீது தனி காதலுடன் இருக்கும் அனுராக்கின் நடிப்பு இப்படம் மூலம் அதிகம் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷூட்டிங் நிறைவு
கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸாக அதர்வா
அதர்வா, 'செம போத ஆகாதே', 'ருக்குமணி வண்டி வருது', 'ஒத்தைக்கு ஒத்தை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்தப் படங்களுக்கு பிறகு 'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படங்களின் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் போலீஸாக நடிக்கவிருக்கிறார் அதர்வா.


Click it and Unblock the Notifications











