தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணாச்சி.. யார் அந்த கருப்பு ஆடு... ஆவேசமாகும் சஞ்சீவ்... தெறிக்கும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸ் சிலர் அபினய் மற்றும் பாவனிக்கு இடையே உள்ள ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனால் ஆவேசமான பாவனி, ராஜு , சிபி என அனைவரையும் விளாசினார். என்னுடைய பர்சனலை பேச நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பினார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இந்த காட்சிகள் நேற்றைய புரமோக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கொதித்துப்போன பாவனியின் ரசிகர்கள் வி ஸ்டாண்ட் வித் பாவனி என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் பாவனி மற்றும் ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையேயான சண்டைகள் காட்டப்படவில்லை.

கட்டிப்பிடித்து சமரசம்

கட்டிப்பிடித்து சமரசம்

இன்றைய எபிசோடில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வெளியான புரமோக்களில் பிக்பாஸ் வீட்டில் அமைதி தழுவியுள்ளது. பாவனி ராஜு, சிபி, நிரூப் என அனைத்து ஆண் போட்டியாளர்களையும் கட்டியணைத்து சமாதானம் பேசுகிறார். இதேபால் இரண்டாவது புரமோவில் பிரியங்கா, தாமரை செல்வியை கட்டிப்பிடித்து சமாதானம் செய்கிறார்.

இன்றே சமாதானம்

இன்றே சமாதானம்

இந்த புரமோக்களை பார்த்த நெட்டிசன்கள் நாளை கமல் எபிசோட் என்பதால் அவர்களுக்குள்ளாகவே சமாதானமாகி கொள்கிறார்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ்
வீட்டில் நடைபெற்ற அரசியல் டாஸ்க் மற்றும் வாக்குப்பதிவில் வெற்றி பெற்ற வேட்பாளர் குறித்து காட்டப்பட்டுள்ளது.

இமான் அண்ணாச்சி வெற்றி

இமான் அண்ணாச்சி வெற்றி

அதன்படி பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற தேர்தலில் என்பிபி கட்சியை சேர்ந்த இமான் அண்ணாச்சி வெற்றி பெற்றுள்ளார். இமான் இடம் பெற்றுள்ள என்பிபி கட்சியும், சிபியின் பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. பிரியங்காவின் உரக்க சொல் கட்சி தனித்து போட்டியிட்டது.

கூடுதலாக ஒரு ஓட்டு

கூடுதலாக ஒரு ஓட்டு

ஒவ்வொரு கட்சியும் தலா 4 பேரை கொண்டுள்ள நிலையில் என்பிபி மற்றும் பிபி மக்கள் முன்னேற்றக் கழகம் 7 ஓட்டுகளையும் பிரியங்காவின் உரக்க சொல் கட்சி 5 ஓட்டுகளையும் பெற்றுள்ளது. இதனைக்கேட்ட அக்கட்சியினர் தங்களின் கட்சியில் இருந்து ஒருவர் பிரியங்காவின் உரக்க சொல் கட்சிக்கு வாக்களித்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

யார் அந்த கருப்பு ஆடு?

யார் அந்த கருப்பு ஆடு?

இதை வைத்தே இமான் அண்ணாச்சி பாத்ரூம் ஏரியாவில் நின்று யார் அந்த கருப்பு ஆடு என கேட்கிறார். சஞ்சீவ்வும் கிட்சன் ஏரியாவில் நின்றப்படி எவன்டா அவன் என்று கத்துகிறார் என தெரிகிறது. பிரியங்காவின் கட்சிக்கு வாக்களித்த அந்த கருப்பு ஆடு யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X