சுயபுத்தியோட விளையாடும் பொம்மை... ஆனா அப்பப்போ ஆவி புகுந்துடும்... ஊமை குத்து குத்திய அண்ணாச்சி!

சென்னை: சுயபுத்தியோடு விளையாடும் பொம்மைக்குள் அவ்வப்போது ஆவி புகுந்து விடும் என சக ஹவுஸ்மேட்டை ஊமை குத்து குத்தினார் இமான் அண்ணாச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கூடாரத்துக்குள் பொம்மையை தூக்கி செல்லும் டாஸ்க்கை தொடர்ந்து புதிய டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.

இதற்காக லிவிங் ஏரியாவில் உள்ள சோஃபாவில் ஹவுஸ்மேட்டுகளை அமர செய்து ஒவ்வொருவரின் பொம்மை குறித்தும் அவர்கள் கைப்பாவையா? பகடைக்காயா? அல்லது சுயபுத்தியுடன் விளையாடுகிறார்களா என்று கூற வேண்டும் என்றார்.

75 சதவீதம் சுயபுத்தி

75 சதவீதம் சுயபுத்தி

இந்த டாஸ்க்கில் முதல் நபராக வந்த அண்ணாச்சி, முதலில் பிரியங்கா பொம்மையை எடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த பொம்மையின் பேச்சு கடந்த சில வாரங்களாக கேட்கப்படாததை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆளை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த பொம்மை 75 சதவீதம் சுயபுத்தியுடனும் 25 சதவீதம் பார்ட்னரின் புத்தியுடனும் செயல்படுகிறது என நினைப்பதாக கூறினார்.

அடுத்தவர் உதவியில்..

அடுத்தவர் உதவியில்..

அடுத்து அக்ஷராவின் பொம்மையை எடுத்த அண்ணாச்சி, இந்த பொம்மை நிச்சயமாக இன்னொருத்தர் உதவியில் மற்றவர்களை நம்பி விளையாடுகிறது. இந்த பொம்மை வருண் ராஜுஆகிய இருவரை நம்பி விளையாடுகிறது என்றார்.

யாரையும் நம்புவதில்லை

யாரையும் நம்புவதில்லை

பின்னர் இசைவாணி பொம்மையை எடுத்த இமான் அண்ணாச்சி, இந்த பொம்மை சுய புத்தியுடன் தான் விளையாடுகிறது. இந்த பொம்மையின் மூளையை யாரும் நம்புவதில்லை, யாரையும் இந்த பொம்மையும் நம்புவதில்லை என்றார்.

அப்பப்போ ஆவி புகுந்துவிடும்

அப்பப்போ ஆவி புகுந்துவிடும்

அடுத்து நிரூப் பொம்மையை எடுத்த அண்ணாச்சி இந்த பொம்மை முழுக்க முழுக்க சுய புத்தியுடன் விளையாடும் ஒரு பொம்மை. ஆனால் அவ்வப்போது இந்த பொம்மையின் சுயபுத்திக்குள் ஆவி புகுந்துவிடும் என்று நிரூப்பின் நடவடிக்கைகளை ஊமை குத்து குத்தினார்.

அருமையாக விளையாடும் பொம்மை

அருமையாக விளையாடும் பொம்மை

அடுத்து பாவனி பொம்மையை எடுத்த இமான் அண்ணாச்சி இந்த பொம்மை வீட்டில் வந்த நாள் முதல் சேஃபாக அருமையாக விளையாடும் பொம்மையாக உள்ளது. இந்த பொம்மை கூட்டணியுடன் விளையாடியது. அந்த கூட்டணியில் இருந்து கடந்த வாரம் ஒரு செங்கல் உதிர்ந்துவிட்டது. தொடர்ந்து நட்புகளுடன் செயல்படுகிறது. இந்த பொம்மை கைப்பாவை அல்ல என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X