லிங்காவில் சூப்பர் ஸ்டாருடன் காமெடியில் கைகோர்க்கும் இமான் அண்ணாச்சி?
சூப்பர் ஸ்டார் படமென்றால் பஞ்ச் டயலாக் பட்டையைக் கிளப்பும். ஆக்சனில் அதிரடி இருக்கும். அதேபோல காமெடியும் பஞ்சமில்லாமல் இருக்கும்.
ரஜினியுடன் கூடவே காமெடி நடிகர் படம் முழுவதும் பயணிப்பார். அப்படி கதையோடு இணைந்துதான் காமெடி இருக்கும்.
கவுண்டமணி, செந்தில் தொடங்கி ஜனகராஜ் என அந்த கால காமெடியன்கள் முதல் வடிவேலு, சந்தானம், கருணாஸ் என இப்போதைய காமெடியன்கள் வரை ரஜினியுடன் நடித்துள்ளனர்.
லிங்கா படத்தில் ரொமான்ஸ்க்கு சோனாக்ஸி சின்கா இருக்கிறார். வில்லனாக மகதீரா பட வில்லன் தேவ்கில் நடிக்கிறார்.

காமெடிக்கு யாரு?
லிங்காவின் காமெடி டிராக்கை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளரும் இயக்குநருமான ரமேஷ்கண்ணா எழுதியுள்ளாராம். அதில் இரண்டு காமெடியன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டுமே ரஜினியுடன் கூடவே பயணிப்பவர்களாம்.

சந்தானம்
ஒரு காமெடியனாக சந்தானம் நடிப்பது உறுதியாகியுள்ளது. மற்றொரு காமெடியனாக வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர் ஸ்டாரிடம் கூறியுள்ளார்.

இமான் அண்ணாச்சி
ஆனால் திரைப்படங்களில் சமீபத்தில் காமெடியில் கலக்கும் நடிகர்களை லிஸ்ட் எடுத்த ரஜினி, சன் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தும் இமான் அண்ணாச்சியின் பெயரை கூறினாராம். இதை பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மையா அண்ணாச்சி
இந்த தகவலை கேள்விப்பட்ட உடன் இமான் அண்ணாச்சியை தொடர்பு கொண்டு கேட்டோம். பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சந்தோசம் என்று கூறினார்.

யாருக்கு வாய்ப்பு?
ரஜினியுடன் லிங்கா படத்தில் பயணிக்க யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











