சுஷாந்துக்கு அஞ்சலி.. தில் பெச்சாரா படத்திற்கு ரேட்டிங் 9.9 கொடுத்த ஐடிஎம்பி.. கொண்டாடும் ஃபேன்ஸ்!
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது படத்திற்கு ஐஎம்டிபி 9.9 ரேட்டிங் கொடுத்துள்ளது.
Recommended Video
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த தில் பெச்சாரா படம் நேற்று இரவு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் ஹீரோவான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் நடித்த படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

கண்ணீர் கடலில்
படத்தில் சுஷாந்த் சிங்கின் அபாரமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். படத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைகிறார் சுஷாந்த். சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சாஹில் வாய்ட், சஸ்வதா சட்டர்ஜி, சுவாஸ்திகா முகர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

10க்கு 9.9 ரேட்டி
இந்நிலையில் படங்கள் குறித்த தகவல்களை அளிக்கும் ஐஎம்டிபி சுஷாந்தின் தில் பெச்சாரா படத்திற்கு 10க்கு 9.9 ரேட்டிங் கொடுத்துள்ளது. சுஷாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ரேட்டிங்கை கொடுத்துள்ளது ஐஎம்டிபி.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்
இதனை சுஷாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #IMDb என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். யூசர்ஸ் ரேட்டிங் பகுதியில் ரசிகர்களும் படத்திற்கு ரேட்டிங்கை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

அந்த கேங்கா இருப்பாங்களோ?
அதில் காலை நிலவரப்படி 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 9.9 கொடுத்துள்ளனர். 121 பேர் 1.1 கொடுத்துள்ளனர். அதனை பார்த்த நெட்டிசன்கள், அந்த 121 பேரும் கரண் ஜோகர் மற்றும் ஆலியா பட் கேங்கை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











