2021ல் இந்திய அளவில் முதல் 10 இடங்களை பிடித்த படங்கள்... முதலிடத்தில் ஜெய் பீம்!
சென்னை : 2021ம் ஆண்டு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டில் ஐஎம்டிபி வலைதளத்தின் மூலம் இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் முதல் இடத்தை நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் பிடித்துள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் தமிழில் மூன்று படங்கள் இடம்பெற்றுள்ளன.

நிறைவு கட்டத்தில் 2021ம் ஆண்டு
2021 ஆம் ஆண்டு தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் ரிலீஸான படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் திரையரங்குகளில் ரிலீசான படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

முதல் 10 இந்திய படங்கள்
இந்நிலையில் இந்திய அளவில் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய 10 படங்களின் பட்டியலை ஐஎம்டிபி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் படம் பிடித்துள்ளது.
ஐஎம்டிபி பட்டியல்
உலக அளவில் பிரபலமான ஐஎம்டிபி, தனது பயனாளிகளின் விருப்பத்துக்குரிய இந்தியாவின் முதல் 10 படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் திரையரங்குகள் மட்டுமின்றி ஓடிடி ரிலீஸ் படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஜெய்பீம் முதலிடம்
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 29 வரை வெளியான படங்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி கடந்த மாதத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஜெய் பீம் படம் அதிகமான பயனாளிகளால் விரும்பப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

ஷெர்ஷா இரண்டாவது இடம்
இரண்டாவது இடத்தை கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ஷெர்ஷா படம் பிடித்துள்ளது. இதில் நாயகனாக மல்ஹோத்ரா நடித்திருந்தார். படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

மூன்றாவது இடத்தில் சூரியவன்ஷி
மூன்றாவது இடத்தை அக்ஷ்ய் குமாரின் போலீஸ் ஸ்டோரியான சூரியவன்ஷி பெற்றுள்ளது. இந்த படத்தில் அவருக்கு கத்ரினா கைப் ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ரன்வீர் சிங் கிராமிய ரோல்களில் நடித்திருந்தனர்.

முதல் 10 இடங்களில் 3 தமிழ் படங்கள்
மேலும் ஐஎம்டிபி யின் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழ் படங்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. அதில் ஜெய்பீம் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் தனுஷின் கர்ணன் படம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஒன்பதாவது இடத்தில் திரிஷ்யம் 2
இந்தப் பட்டியலில் 9வது இடத்தை மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணியில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 படம் பெற்றுள்ளது. 10வது இடத்தை டாப்ஸியின் அசின் தில்ரூபா படம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











